நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்

By John A

Published:

TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தவெக கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியுள்ளதாக அறிவித்தார். மேலும் அதற்கான கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார். மேலும் கொடியை ஏற்றி வைத்து முறையான அரசியல் கட்சித்தலைவராக உருவெடுத்தார். தவெக கொடியில் இரண்டு கருஞ்சிவப்பு நிறங்களுக்கு மத்தியில் அடர் மஞ்சள் நிறமும், வெற்றிக்கான அடையாளமாக தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட வாகைப் பூவும் அதனைச் சுற்றி நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

மேலும் கொடியின் இடது வலது பக்கங்களில் யானை இடம்பெற்றிருந்தது. இதனால் கொடி பற்றிய சலசலப்பு நிலவியது. ஏற்கனவே தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தில் யானை இடம்பெற்றுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் தவெக கொடியில் யானை உருவத்தினை நீக்கச் சொல்லி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாருக்கான பதிலை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் கட்சிகளுக்கான கொடிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதோ, அதில் இடம்பெற்றிருக்கும் உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுப்பதில்லை என்றும், மேலும் சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டத்தின்படி கொடிகள் விதிமுறைக்குட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பதில் அனுப்பியிருக்கிறது.