உங்களுக்கெல்லாம் எடுபிடி வேலை பார்க்க முடியாது.. எகிறிய பணியாளர்.. கடுப்பான சீனியர்.. கடைசியா என்ன ஆச்சு தெரியுமா?

By John A

Published:

பொதுவாக அலுவலகங்களில் உயர் அதிகாரிகளைக் காக்கா பிடித்தால் மட்டுமே வேலையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் அடுத்தடுத்து புரோமோஷனிலும் செல்ல முடியும் என்பது உலகெங்கிலும் எழுதப்படாத விதி.

அனைத்து அலுவலங்களிலும் தங்களது உயர் அதிகாரிகளுக்கு வேலையைத் தவிர்த்து அவர்களுக்கு அன்பை மீறி தனிப்பட்ட முறையில் வேலைகள் செய்து கொடுப்பது, அவர்கள் குடும்பத்தினருக்கு வேலைகள் செய்வது, ஏன் அவர்கள் வீட்டு நாயைக் கூட வாக்கிக் கூட்டிச் செல்வது அடுத்த நிலையில் உள்ள வேலையாட்கள் தான். இந்த அடிமை முறைய பன்னெடுங் காலமாக உலகம் முழுக்க இருந்து வருகிறது.

நள்ளிரவில் மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி..அடுத்தடுத்து காத்திருந்த டிவிஸ்ட்..

இவ்வாறு சீனாவில் தனக்கு தனிப்பட்ட முறையில் பணிவிடை செய்யாத பெண் ஒருவரை சீனியர் அதிகாரி ஒருவர் வேலையை விட்டு நீக்கியிருக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கம்யூனிச நாடான சீனாவில் முதலாளி வர்க்கம் என்பது கிடையாது.

இங்கு அனைவரும் சமம் என்ற வகையில் தான் அரசாங்கம் நடைபெறுகிறது. இந்நிலையில் சீனாவின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் தனது சீனியருக்கு தினசரி டிபன் மற்றும் காபி வாங்கித் தருவது வழக்கமாம். ஒருகட்டத்தில் இந்த வேலை அவருக்கு சலிப்பை ஏற்படுத்தியது. தனது வேலைகளை விட்டுவிட்டு இவருக்கு ஏன் தனிப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டும் என்று யோசித்து அந்த சீனியர் அதிகாரியிடம் உங்களின் தனிப்பட்ட வேலைகளைச் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பான அந்த சீனியர் அதிகாரி இவரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த அப்பெண் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் முறையிட்டார். மேலும் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் அந்நிறுவனம் விசாரணை செய்து பணி நீக்கம் செய்த அந்த அதிகாரியை வீட்டிற்கு அனுப்பியது. மேலும் அப்பெண்ணிற்கும் மீண்டும் பணியை வழங்கி இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.