நள்ளிரவில் மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி..அடுத்தடுத்து காத்திருந்த டிவிஸ்ட்..

By John A

Published:

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. நிர்பயா வழக்கால் நாடே கொதித்தெழுந்தது நினைவிருக்கலாம். தனியாக வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருபக்கம் பெண்கள் உரிமை அமைப்புகள் தொடர்ந்து போராடிக்கொண்டே வருகின்றன. அரசும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல வகைகளில் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இவ்வாறு பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் சரியாகச் செயல்படுகிறதா நள்ளிரவில் ஓட்டுநர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றிய அறிய பெண் துணை போலீஸ் கமிஷ்னர் ஒருவர் மாறுவேடத்தில் சென்று ஆய்வு செய்து கொடுத்த பதில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்ராவில் பணிபுரியும் பெண் உதவி காவல் ஆணையாளர் சுகன்யா ஷர்மா பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக அவரே களத்தில் இறங்கினார். 33 வயதான சுகன்யா ஷர்மா ஆக்ராவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவசர கால அழைப்பான 112 அழைத்து தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும், தனக்கு பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தும் 98% சிறுவணிகர்கள்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

அப்போது எதிர் முனையில் பேசிய அவசர கால அழைப்பு அதிகாரி சுகன்யா ஷர்மாவினை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், தங்களுக்கு உதவ உடனடியாக பெண் போலீஸ் ரோந்து வாகனம் தங்கள் இருப்பிடத்திற்கு வரும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அதன்படியே பெண் காவல் ரோந்து வாகனம் இருப்பிடத்திற்கு வந்தவர்களுக்கு சுகன்யா ஷர்மாவினைப் பார்த்து அதிர்ச்சி ஆகினர். பின் சுகன்யா ஷர்மா ஆய்வுப் பணி பற்றி கூறி உடனடியாக வந்ததற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அடுத்த கள ஆய்வில் இறங்கினார். ஓர் ஆட்டோவில் ஏறி தான் செல்ல வேண்டிய இடம் மற்றும் கட்டணம் பற்றிக் கேட்க, ஆட்டோ ஓட்டுநரும் சரியான பதிலைக் கூறியிருக்கிறார். அப்போது ஆட்டோவில் பயணித்த சுகன்யா ஷர்மா அந்த டிரைவரிடம் நள்ளிரவில் பெண்கள் பாதுகாப்பு கொடுத்துப் பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த ஓட்டுநர் சீருடையில் இல்லாததால் சீருடை அணியச் சொல்லியிருக்கிறார். பின் அந்த ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக சுகன்யா ஷர்மா இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டிருக்கிறார். இப்படி அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளைப் புரட்டாமல் களத்தில் என்ன நிகழ்கிறது என்பதை சாதாரண பெண்கள் போல் ஆய்வு செய்த உதவி காவல் ஆணையாளர் சுகன்யா ஷர்மாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.