பங்குச்சந்தையை புரட்டி எடுத்த தங்கம்.. இன்னும் உயருமா?

By Bala Siva

Published:

 

இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி அமெரிக்க பங்குச் சந்தையையும் தங்கத்தின் விலை புரட்டி போட்டு இருப்பதாக கூறப்படுவது பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை தங்கம் ஒரு சிறந்த முதலீடாகக் கருதப்பட்டாலும், சிறு முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்து வந்தனர்.

தங்கம் பெரிய அளவில் வருமானம் தராது என்று நிதி ஆலோசகர்கள் கூறியிருந்த போதும், அவர்களது ஆலோசனையை மீறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை பங்குச் சந்தையை விட மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச் சந்தை மட்டுமின்றி அமெரிக்க பங்குச் சந்தையையும் தாண்டி தங்கம் அதிக வருமானத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்களுக்கு முதலீடு செய்ய தங்கம் மற்றும் பிக்சட் டெபாசிட் ஆகிய இரண்டே ஆப்ஷன்கள் இருந்தன. ஆனால் தற்போது மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை உள்ளிட்ட பல வழிகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் இருப்பதால், தங்கத்தை பலர் கிட்டத்தட்ட மறந்துவிட்டனர்.

அதே சமயம், தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது பெரும் லாபத்தை அடைந்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் அதிகமாக உயரும் என்றும், தற்போது ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7000 என்ற நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் ரூ.10,000 என்ற இலக்கை எட்டும் என்றும் கூறப்படுகிறது.