ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தும் 98% சிறுவணிகர்கள்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

By Bala Siva

Published:

 

அமெரிக்காவில் 98 சதவீத சிறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை வளர்ச்சியடைய ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டிருப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது.

ஏ.ஐ. டெக்னாலஜி இன்று தவிர்க்க முடியாத அம்சமாக மாறிய நிலையில், மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை இதை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் ஏ.ஐ. டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்த தொடங்கிய நிலையில், சிறு வணிகர்கள் ஏ.ஐ. டெக்னாலஜியை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு முடிவில், அமெரிக்காவில் உள்ள 98 சதவீத சிறு வணிகர்கள் ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் தங்கள் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், வேலைக்கு ஆட்களை வைத்தால் அதிக செலவாகும் என்பதால், ஏ.ஐ. டெக்னாலஜியின் உதவியால் பல வேலைகளை சிறு வணிகர்கள் முடித்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவுகள் குறைந்து, லாபம் அதிகரிக்கிறது.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் சிறு வணிகர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும்பாலும் ஏ.ஐ. டெக்னாலஜியை பயன்படுத்தி வருவதால், எதிர்காலத்தில் இந்த டெக்னாலஜி மூலம் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.