எஸ்ஜே.சூர்யாவைப் பார்த்து ‘கெட் அவுட்’னு சொன்ன பாரதிராஜா… அட அப்படி என்னதான் நடந்தது?

By Sankar Velu

Published:

‘நடிப்பு அரக்கன்’ என்று போற்றப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைவதற்குப் பட்ட அவமானங்கள் என்னென்னன்னு பாருங்க…

கிழக்குச் சீமையிலே படத்தை இயக்கியவர் பாரதிராஜா. அந்தப் படத்துக்கு சூட்டிங் நடக்குது. போய் பார்ப்போம். எப்படியாவது வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்னு எஸ்.ஜே.சூர்யாவும் போறாரு.

அங்க ஒரு காதல் காட்சி படமாக்கப் போகுது. இளம் ஜோடிகளாக விக்னேஷ், ருத்ரா நடிக்கிறாங்க. அப்போ அவங்க ஒரு குன்று மேல நிக்கணும். அதுக்கான பொசிஷனை அசிஸ்டண்ட் டைரக்டரைக் கூப்பிட்டு நிக்கச் சொல்றாரு டைரக்டர். அப்போ ஹீரோக்கு ஒருத்தர் நிப்பாரு. ஹீரோயினுக்கு ஒருத்தர் நிப்பாரு. அப்போ கடகடன்னு எஸ்.ஜே.சூர்யா ஏறி நின்னுட்டாரு. டைரக்டருக்கு பயங்கர கோபம். யார்றா இது அசிஸ்டண்ட் டைரக்டரைச் சொன்னா எவனோ வந்து நிக்குறான்னு பார்க்குறாரு.

அசிஸ்டண்ட் டைரக்டர் கொடுக்க வேண்டிய பொசிஷனை யாரோ கொடுக்குறாரே யார் இவருன்னு கோபத்துல கேட்குறாரு. அந்த டென்ஷன்ல சூர்யாவுக்குப் பேச்சே வரல. அவரு ஏதோ சொல்ல வந்தாரு. பர்ஸ்ட் யு கெட் அவுட்னு சொன்னாரு. அப்புறம் யாருக்கிட்டயோ கேட்டு விசாரிக்கிறாரு. அப்புறம் தான் தெரியுது. எப்படியாவது இந்தப் படத்துக்கு எப்படியாவது ஏதாவது ஒரு விதத்துல வாய்ப்பு கிடைக்காதான்னு பார்த்துருக்காரு. சினிமாவுல அவர் கொண்ட தாகம்னு தான் சொல்லணும்.

இன்னைக்கு வந்து எஸ்.ஜே.சூர்யா ரொம்ப பெரிய நடிகராகவும், இயக்குனராகவும் வந்துட்டாரு. அதுக்கு முக்கியமான காரணம் தாகமும், அப்படியே அவமானங்களை எல்லாம் சகிச்சிக்கிட்டு அர்ப்பணிப்போடு சினிமாவை அணுகியவரும்தான்னு சொல்லணும்.

SJ.Surya
SJ.Surya

பாரதிராஜா கூடவே இருந்தோம்னா எப்படி அவர் படமாக்குறாருன்னு கத்துக்கலாம் இல்லையா. அந்த ஒரு முனைப்புல வந்துட்டாரு. அவருக்கிட்ட போய் சேருறது எல்லாம் கஷ்டமா இருந்தது. அப்ளிகேஷன் போட்டு எல்லாம் சேர முடியாது.

ஏன்னா ஏற்கனவே அவருக்கிட்ட அசிஸ்டண்டா சேர 100 பேரு கியூல நிப்பான். அந்த கியூவை எப்படியாவது ஸ்கிப் பண்ணனும்னு முன்னாடி வந்துட்டாரு. அப்புறம் பாரதிராஜாவே அவர் மேல பரிதாபப்பட்டு அந்தப் படத்துல ஒரு சின்ன சீன்ல நடிக்க வச்சிருப்பாரு. ஒரு டைரக்டராகவும் நிரூபிச்சிருக்காரு. ஆனா அவர் உள்மனசுல எப்படியாவது சினிமாவுல நடிக்கணும்னு தான் வந்தாரு.

அதுக்கான வாய்ப்பை பாரதிராஜா கொடுத்தாரு. அதுக்கு அப்புறம் வசந்த்கிட்ட ஒர்க் பண்ற சூழல் அமைஞ்சது. அப்போ அஜீத் நடிச்ச ஆசை, உல்லாசம் படங்கள்ல ஒர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்புறம் அஜீத் உடன் நல்ல நட்பு உண்டாக அப்படி கிடைச்ச வாய்ப்பு தான் வாலி படம்.

அது தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்து அவருக்கு திருப்பு முனையைத் தந்தது. மேற்கண்ட தகவல்களைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.