தமிழக மின் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சட்ட விரோத பணப்பரிமாற்ற செய்ததாக அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அமைச்சர் பதவியை இழந்தார். பல முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், 471 நாட்களுக்குப் பிறகு அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், ஒருவருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த காரணத்தினாலும் இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதன் உத்தரவு நகல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு வரும் வரை செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளிய வரவில்லை. இந்நிலையில் இரவு 7 மணியளவில் அவர் புழல் சிறையிலிருந்து ஜாமீன் விடுதலையானார். இன்று காலை அவருக்கு ஜாமீன் கிடைத்த உடனே கரூரில் அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
ஜெயம்ரவி என்னிடம் வந்தது உண்மைதான்… ஒரே போடாய் போட்ட பாடகி கெனிஷா…
இந்நிலையில் செந்தில்பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்ததும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் தொண்டர்கள் புடைசூழ வந்த அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது பேசுகையில், என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு பாசமிகு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கிலிருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்.” என்று கூறினார்.
அமைச்சர் பதவியை இழந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே இலாகாக்களை வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 30, அல்லது 1ம் தேதி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.