பாலா, அமீர் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு முதன் முதலாக மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு சுப்ரமணியபுரம் படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்தார் சசிக்குமார்.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் அரிவாள் கலாச்சாரத்தை கொண்டு வந்த இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து சசிக்குமார் ஈசன் படத்தினை இயக்கினார். ஆனால் இப்படம் சரிவரப் போகவில்லை. இதனையடுத்து நடிப்பில் சசிக்குமார் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தொடர்ந்து தென்மாவட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். சமீபத்தில் வெளிவந்த அயோத்தி, கருடன், நந்தன் ஆகிய படங்களின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் கலக்கி வருகிறார். சசிக்குமார் இயக்குநராக இருக்கும் போது நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் தான் எழுதிய காவல் கோட்டம் நாவலின் கதையை விஜய்க்குச் சொல்ல அவரும் ஒகே சொல்லியிருக்கிறார். 2011-ல் இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றது காவல் கோட்டம். இந்த நாவலின் கதையைத் தான் சசிக்குமார் திரைப்படமாக எடுக்க விரும்பினாராம்.
விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
சசிக்குமாரும், சு. வெங்கடேசனும் இதற்காக சில தயாரிப்பாளர்களை அணுகியிருக்கின்றனர். ஆனால் படம் வரலாற்றுப் படமாக உருவாகக் கூடியது என்பதால் பட்ஜெட் அதிகம். எனவே அந்த தருணத்தில் தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இதனையடுத்து அந்தத் திட்டத்தினைக் கைவிட்டிருக்கிறார் சசிக்குமார்.
இருப்பினும் விஜய்யிடம் சசிக்குமார் வேறொரு கதையைக் கூறட்டுமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் விஜய் சசிக்குமாரிடம், எனக்கு காவல் கோட்டம் கதையின் மீது நம்பிக்கை இருந்தது. நாம் மூவரும் இணைந்து இந்தப் படத்தினை பண்ணணும். இல்லையென்றால் வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதன்பின் இயக்குநராக சசிக்குமார் எந்தப்படத்தினையும் இயக்கவில்லை. எனினும் புதுமுக இயக்குநர்கள் பலரின் கதையில் நடித்துக் கொடுத்து அவர்களையும் வளர்த்துவிட்டிருக்கிறார்.