எப்பேற்பட்ட பெரிய பிரச்சனைக்கும் சிறிய தீர்வே பலன் தரும். அந்த தீர்வை நாம் எடுக்க கடவுள் அருளும், பித்ருக்கள், நவக்கிரங்கங்கள் தேவதைகள் ஆகியோரும் ஆசியும் தேவை.. அவற்றை பெற எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.. பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து நலம் பெறலாம்…
வழக்குகள், பஞ்சாயத்துகளில் வெற்றி கிட்ட சிவன் கோவிலில் இருக்கும் வன்னி மரம் மற்றும் வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாய் வரும். இம்மரங்கள் தெய்வசக்தி கொண்டதால் நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளது என நம்பப்படுகிறது.
பிரதோச காலத்தில் நந்தி வாகனத்தில் இருக்கும் அம்மையப்பனை வழிபட்டால் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறலாம். அதிலும் ஈசானிய மூலையில் அம்மையப்பனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
திருமண தடைப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள் சிவனுக்கு உகந்த உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும். விநாயகருக்கு எருக்கஞ்செடி நாரில் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.
நல்லதொரு வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய்விளக்கேற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும். விபத்துகளில் சிக்காமலிருக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் இருக்கும் வேலில் எலுமிச்சைப்பழம் சொருகி முருகனுக்கு அர்ச்சனை செய்து, நீண்ட பயணத்தை தொடங்கலாம்..
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது என்பது ஐதீகம். அதனால் வீட்டில் துளசி வளர்ப்பது நல்லது. சாளக்கிராமத்தினை வீட்டில் வைத்து வழிபடலாம்.
பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவை ஐந்தும் கலந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க தோசம், தீட்டு நீங்கி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
எளிய பரிகாரங்கள் தொடரும்….