ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AI

By John A

Published:

செல்போன் வந்தது போதும் உலகமே தலைகீழாய் மாறிவிட்டது. செல்போனில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான வசதிகளுக்கேற்ப தொந்தரவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி பட்டன் செல் முதல் ஐபோன் வரை விடாமல் துரத்தும் ஒரு தொல்லை தான் ஸ்பேம் கால்கள். நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை நமது போனில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்ஸ்களின் வழியாக நமது தரவுகளைத் திருடுகிறது.

மேலும் நமது தனிப்பட்ட தகவல்கள் மூலமாக தினசரி லோன் வேண்டுமா? பணம் வேண்டுமா? அந்த பேங்க்.. இந்த பேங்க என எக்கச்சக்க அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஏதேனும் முக்கியமான தருணங்களில் கூட இதுபோன்ற அழைப்புகள் அனைத்து கம்பெனி நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கும் மிகப்பெரிய தொல்லையாக இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட நினைத்தாலும் வேறு வேறு ரூபத்தில் தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்கின்றனர். இதன் மூலம் பணம், பொருள்களை இழந்தவர்கள் ஏராளம்.

இனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!

நமக்கு நண்பர்கள், உறவினர்கள் அழைக்கிறார்களோ இல்லையோ நாள்தோறும் ஸ்பேம் கால்கள் தவறாது வந்துவிடும். இதற்கெல்லாம் தற்போது முடிவுகட்டத் தொடங்கியிருக்கிறது ஏர்டெல் நெட்வொர்க். வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தின் அசாத்திய உதவியால் இனி மோசடி மற்றும் விளம்பர அழைப்புகளைக் கண்டறிந்து அலார்ட் கொடுக்கும் வகையில் ஏர்டெல் நெட்வொர்க்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இனி தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்-கள், ஸ்பேம் கால்கள் ஆகியவற்றை எந்த ஒரு கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தரப்படும் எனவும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான ஸ்பேம் கால் தொல்லைகளை நாம் அறவே தவிர்க்கலாம்.