ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மூத்த சகோதரி ஆன ஏ ஆர் ரிஹானா அவர்களின் மகன் ஆவார். விடுதலை திரைப்படத்தில் நாயகியாக நடித்த பவானி ஸ்ரீ இவரது தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். இந்த திரைப்படத்தில் வந்த வெயிலோடு விளையாடி பாடல் இன்று அளவும் எவக்ரின் பாடலாக இருக்கிறது. தொடர்ந்து ஓரம்போ, கிரீடம், ஆனந்த தாண்டவம், குசேலன், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம் போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.
2008 ஆம் ஆண்டு குசேலன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக திருப்பு முனையை பெற்றார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, நாச்சியார், பென்சில், பேச்சிலர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜி வி பிரகாஷ் குமார். அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார் ஜி வி பிரகாஷ்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷ் தனக்கு யார் காம்பெட்டிசன் என்பதை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் யாருக்கும் காம்பெட்டிசன் இல்லை. நான் யாரையுமே காம்பெட்டிஷனாக பார்ப்பதும் கிடையாது. தனுஷ் மாதிரி என்னுடையதும் சோலோ ட்ராக் தான். ஒரு 20 வருஷம் கழிச்சு ஜிவினு எடுத்து பார்த்தா ஒரு அஞ்சு படமும் ஒரு 30 பாட்டு மக்கள் பார்த்து ரசிச்சாலே எனக்கு அது போதும் என்று ஓபனாக பேசி இருக்கிறாள் ஜிவி பிரகாஷ்.