வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். வணிக ரீதியாக வெற்றி பெறும் நல்ல விமர்சனங்களை பெறும் தனித்துவமான கதைகளை இயக்குவதில் புகழ் பெற்றவர் வெற்றிமாறன்.
2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். இந்த படத்தில் வந்த பல்சர் பைக் அந்த நேரத்தில் மிகப் பிரபலமாக ஆனது. இளைஞர்களின் பலர் அந்த பைக்கை வாங்கினர். அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு மறுபடியும் தனுசுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார்.
ஆடுகளம் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அடுத்ததாக வட சென்னை திரைப்படத்தை இயக்கினார். 2019 ஆம் ஆண்டு அசுரன் திரைப்படத்தை மீண்டும் தனுஷ் உடன் இணைந்து இயக்கினார்.
அசுரன் திரைப்படமும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. கடந்த வருடம் சூரியை நாயகனாக அறிமுகம் செய்து விடுதலை பாகம் ஒன்று இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது விடுதலை பாகம் 2 வெளியாக தயாராக இருக்கிறது. தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் வெற்றிமாறன். ஜூனியர் என்டிஆர் போன்றோர் வெற்றிமாறனுடன் படம் பண்ண வேண்டும் என்று விரும்புகின்றனர். அதை ஓபனாக தங்களது நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வெற்றிமாறன் தற்போதைய ட்ரெண்டிங் டைரக்டர்களை பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால் தற்போதைய காலகட்டத்தில் மெயின் ஸ்ட்ரீம் இயக்குனர் என்றால் அது மாரி செல்வராஜ் தான். வாழை திரைப்படம் பட்ஜெட் தாண்டி இரண்டு மடங்கு லாபம் தற்போது எடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் தற்போது தேவை என்று ஓபனாக பேசியிருக்கிறார் வெற்றிமாறன்.