சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் 7,060 :ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2920 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இன்று ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை கடந்த நிலையில், இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது..அமெரிக்காவில் பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பலரும் தங்கத்தின் மீது முதலீட்டை திருப்ப தொடங்கினார்கள். இது ஒருபுறம் எனில், அமெரிக்க பெடரல் வங்கியைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கியும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள்.இதன் காரணமாக உலகம் முழுவதும் தங்கம் விலை கட்டுக்கடங்காமல் மீண்டும் உயர்ந்து கொண்டே போகிறது..
முன்னதாக கடந்த ஜூலை மாதம் வரை உயர்ந்து வந்த தங்கத்தி மீதான சுங்கவரியை, மத்திய அரசு பட்ஜெட்டில் குறைத்தது. இதன் காரணமாக தங்கம் விலை அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. அதன் பின்னரும் விலை குறையத் தொடங்கியது. இதனால் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. . ஆனால் அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதால், தங்கம் விலை மின்னல் வேகத்தில் மீண்டும் உயரத்தொடங்கியது.
அந்த வகையில் கடந்த 21-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனை ஆகி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் கடந்த 24ம் தேதி பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, புதிய மைல் கல்லை எட்டியது. இதனையடுத்து நேற்றும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.20-ம் பவுனுக்கு ரூ.160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்துக்கும், ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் 7,060 :ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை பொறுத்த வரையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.365-ம், பவுனுக்கு ரூ.2,920-ம் அதிகரித்திருக்கிறது. குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களிலும் இதுபோல தங்கம் விலை உயர்ந்தே காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்திருப்பதால் பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போதைய நிலையில் ஒரு சவரம் தங்கம் விலை ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் ஆகியவற்றுக்கு பின்னர் ஒரு பவுன் தங்கம் 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் 70000 ரூபாய்யை ஒரு பவுன் தொட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள் நகை வியாபாரிகள்.