பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை

By John A

Published:

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 19 அன்று தொடங்கிய தேர்வுகள் வருகிற 27.09.24 வரை நடைபெறுகிறது. அதன்பின் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக அக்டோபர் 2 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாக காலாண்டுத் தேர்வு விடுமுறையானது பத்து நாட்களாவது விடப்படும். இந்நிலையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என இருந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்தனர். மேலும் விடுமுறைய நீட்டிக்கக் கோரி பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையானது நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…

அதில் கூறப்பட்டுள்ளதாவது
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 7.10.2024 அன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பினால் மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.