லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கார்த்திக்கு தரமான பதில் அளித்த பவன் கல்யாண்…

By Meena

Published:

தற்போது இந்தியாவை புரட்டிப்போட்டு பேசிக் கொண்டிருக்கும் விஷயம் திருப்பதி லட்டு விவகாரம் தான். திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட நெய் கலப்படமாகி சேர்க்கப்பட்டது என்பதை அறிந்து சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் ஆன்மீகவாதிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து கொந்தளித்து விட்டனர்.

என்னதான் திருப்பதி லட்டுக்கு நெய் சப்ளை செய்யும் நிறுவனம் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று மறுத்தாலும் ஒரு பக்கம் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பூஜை புனஸ்காரங்கள் யாகங்கள் கோவிலை சுத்தப்படுத்த பலவிதமான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்யாண் இந்த சம்பவத்திற்காக தீட்சை கடைபிடிக்க போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி ந்திராவில் நடந்த தனது பட ப்ரோமோஷன் நிகழ்சியில் லட்டுவை பற்றி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு லட்டு ரொம்ப சென்சிடிவ் ஆன விஷயம் அதுக்கு நான் பேசப்போவதில்லை என்று ஒரு கேலி செய்வது போல் பேசி இருப்பார். இந்த காணொளியை கண்ட பவன் கல்யாண் மிகவும் கொதித்து எழுந்து விட்டார்.

பத்திரிக்கையாளர்களிடம் லட்டு நீங்கள் கேலி செய்வதற்கு உண்டான பொருளா இது இந்து சனாதன தர்மத்தை அவமதிப்பது போன்றதாகும் ஒரு பட நிகழ்ச்சியில் எதற்காக லட்டுவை பற்றி பேசுகிறீர்கள் ஒரு சினிமா பிரபலம் மக்கள் பார்க்கும் பிரபலமாக இருப்பவர்கள் இப்படி செய்யலாமா என்று கோபத்துடன் பேசி இருந்தார்.

இதை கண்ட உடனே கார்த்தி பவன் கல்யாண் அவர்களை குறிப்பிட்டு தனது twitter பக்கத்தில் என்னை மன்னித்து விடுங்கள் பவன் கல்யாண் இது அறியாமையால் அன்இன்டென்ஷனாக நடந்த ஒரு தவறு தான் நான் இந்து மதத்தை மதிப்பவன் மற்றும் வெங்கடேஸ்வர கடவுளின் தீவிர பக்தன் தான். நான் எல்லாவற்றையும் மதிப்பவன் என்று கூறி பதிவு போட்டிருந்தார். நடிகர் சூர்யாவும் எனது தம்பி அறியாமையால் செய்த அந்த தவறுக்கு மன்னித்து விடுங்கள் பவன் கல்யாண் அவர் பேசிய இந்த தவறுக்காக நானும் உங்களை போலவே மூன்று நாள் தீட்சை கடைபிடிக்க போகிறேன் என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பவன் கல்யாண் மறுப்பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அவர் கார்த்தி மற்றும் சூர்யா அவர்களே, நான் உங்களை தவறாக எதுவும் சொல்லவில்லை. திருப்பதி லட்டு பிரச்சனை கேலி செய்யும் ஒரு பொருள் அல்ல என்பதை தான் நான் சொன்னேன். நீங்கள் அன்இன்டென்ஷனாக தான் அந்த மேடையில் பேசினீர்கள் என்பது எனக்கு புரிகிறது. உங்களுக்கும் சூர்யாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது படங்கள் வெற்றியடையவும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.