ரசிகர் மன்றங்கள் எதற்காக உருவாக்குகிறார்கள்…? அரவிந்த்சாமி கேள்வி…

By Meena

Published:

அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபல நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமார் அவர்களுக்கு பிறந்தர் அரவிந்தசாமி. பின்னர் தனது மாமாவிடம் வளர்ந்தார்.

மணிரத்ம் இயக்கிய தளபதி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்தசாமி அடுத்ததாக மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் நாயகனா அறிமுகமானார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழும் அடைந்தார் அரவிந்த்சாமி.

தொடர்ந்து பம்பாய், இந்திரா, மின்சாரக்கனவு, என் சுவாச காற்றே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்த அரவிந்த்சாமி இடையில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்.

தற்போது மீண்டும் 2015 ஆம் ஆண்டு முதல் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார் அரவிந்தசாமி. தற்போது இவரும் கார்த்தியும் இணைந்து நடித்திருக்கும் மெய்யழகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரவிந்தசாமி ரசிகர் மன்றங்களை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், நான் ஒரு நடிகன் தான். இன்னைக்கு நடிக்க வருவேன் நாளைக்கு நடிக்காமல் போயிடுவேன். நடுவுல இந்த ரசிகர் மன்றங்கள் எதற்காக. தன்னுடைய ரசிகர் மன்றம் உருவாக்குவதற்கு காரணம் என்ன. நா நடிக்காமல் போயிட்டோம்னா அந்த ரசிகர் மன்றத்தினால் என்ன பயன். இதெல்லாம் ஒரு தேவையில்லாத வேலை தான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அரவிந்த்சாமி.