உயிரிழந்து கிடந்த பெண்.. 36 வருசமா சிக்காமல் இருந்த குற்றவாளி.. எச்சில் மூலம் முடிவுக்கு வந்த பல வருட மர்மம்..

By Ajith V

Published:

கடந்த 1988 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கான காரணம் யார் என்பதிலும், குற்றவாளி யார் என்பதிலும் நிறைய சந்தேகங்கள் இருந்து வந்துள்ளது. ஒரு சிலர் மீது சந்தேகங்கள் இருந்து வந்தாலும் அவர் தான் செய்தார் என்பதில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.

ப்படி இருக்கையில் தான் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இந்த கொலைக்கான குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், வியப்பை ஏற்படுத்தி உள்ளது. போஸ்டன் நகரத்தில் கடந்த 1988 ஆம் ஆண்டு கரேன் டெய்லர் (Karen Taylor) என்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது கொலை என்பதுறுதியானாலும் இதற்கான காரணம் என்ன என்பது தெரியாமலும் பின்னால் யார் இருக்கிறார் என்பது தெரியாமலும் போலீசார் அவதிப்பட்டு வந்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் ஒரு சிறிய க்ளூ மட்டும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. கரேன் டெயிலர் உடல் அருகே ஹோலோமன் (Holloman) என்ற நபரின் செக் ஒன்று கிடந்துள்ளது.

ஆனால் கரேன் டெயிலரை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்ததால் அப்போதுள்ள தடயவியல் நிபுணர்களால் இதை இணைக்க முடியாமல் போனது. மேலும் அந்த காலத்தில் எல்லாம் டிஎன் பரிசோதனை அப்டேட் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகாவே பல நாடுகளில் சுமார் 50 வருடங்கள் வரை பழமையா அதே வேளையில் முடியாமல் இருக்கும் நிறைய கொலை வழக்குகள் டிஎன் பரிசோதனைகைள் மூலம் தீர்வு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கரேன் வழக்கிலும் தீர்வு கிடைத்துள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி, போஸ்டன் பகுதியில் அபார்ட்மெண்ட் ஒன்றில் 25 வயதே ஆன கரேன் டெயிலர் உயிரிழந்து கிடந்துள்ளார். ந்த சமயத்தில் க்ரேனின் தாயார் அவரை அழைத்துள்ளார். ஆனால், கரேன் போனை எடுக்காத நிலையில், அவரது 3 வயது மகள் தொலைபேசியை எடுத்து நீண்ட நேரமாக தாய் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும் அழைத்தாலும் எழும்பவே இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

இதனால், க்ரேனின் தாயார் சந்தேகத்தில் வந்து பார்த்த போது அவர் உயிரிழந்து கிடந்ததும் தெரிய வந்துள்ளது. அவர் உடல் பகுதியில் நிறைய காயங்கள் இருந்த சூழலில் ஹோலோமன் மீது சந்தேகம் இருந்தும் அவரை கைது செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

ப்படி இருக்கையில், சமீபத்தில் தற்போது 65 வயதாகும் ஹோலோமன் வெளியே நடந்து சென்ற போது எச்சில் துப்பி உள்ளார். இதனை அதிகாரிகள் சேகரித்து டிஎன் பரிசோதனை மேற்கொண்ட போது கரேனின் விர்ல் நகத்தில் இருந்த ரேகைகளும், அவரது உடல் அருகே இருந்த சிகரெட்டுனும் அவை பொருந்தி போயுள்ளது உறுதியாகி உள்ளது.

தனால், சுமார் 36 ஆண்டுகள் கழித்து கரேன் டெயிலரின் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரிய நிம்மதியையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.