காரை எடுத்துக் கொண்டு 16 கி.மீ போன 8 வயது சிறுமி.. அதுவும் எதுக்காக தெரியுமா.. இணையத்தில் வைரலான வீடியோ..

By Ajith V

Published:

எட்டு வயதாகும் சிறுமி ஒருவர் தனது தாயின் காரை எடுத்துக் கொண்டு சென்ற நிலையில் அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஓஹியோ மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில் அங்கே கார் ஒன்று சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் சரியாக செல்லாமல் சாலையில் தாறுமாறாக சென்றதையும் பலர் கவனித்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வெளியான தகவலின் படி, ஜஸ்டின் கிமேரி என்று நபர் ஒருவர் போலீசாரின் உதவி எண்ணான 911 அழைத்து பொறுப்பற்ற முறையில் ஒருவர் கார் ஒட்டி செல்வதா புகார் அளித்துள்ளார். மேலும் ஜஸ்டின் முதலில் அது ஒரு வயதான ஆள் என்றும் நினைத்துள்ளார். அத்துடன் இளைஞர் ஒருவர் அனைத்து வழிகளிலும் காரை ஓட்டி வந்ததாகவும் ஜஸ்டின் கூறி உள்ளார்.

ஆனால், பின்னர் தான் அது ஒரு இளைஞர் இல்லை என்பதும் அது ஒரு 8 வயதே ஆகும் சிறுமி என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த சிறுமி தனது தாயின் காரை எடுத்துவிட்டு வீட்டில் இருந்து வேகமாக புறப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் வீட்டி்ற்கு அருகே உள்ள வீட்டின் கேமராவில் அவர் காரை எடுத்து விட்டு கிளம்பும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

தனிடையே, அந்த சிறுமியின் பெற்றோர்களும் மகளை காணாமல் அதிர்ந்து போய் போலீசிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர். அதே வேளையில், அந்த சிறுமி தாயின் காரை எடுத்து விட்டு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அத்துடன் செல்லும் வழியில் சரியாக காரை ட்டாமல் தபால் பெட்டியிலும் கூட மோதி சென்றுள்ளார். ஆனால், அதிர்ஷ்டமாக பொது மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சிறுமி அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு கிளம்பி வந்ததும் தெரிய வந்துள்ளது.

து மட்டுமில்லாமல், போலீசார் அந்த சிறுமியை கண்டுபிடித்த போது அவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டு நின்றதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியை பத்திரமாக மீட்டதுடன் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் பெற்றோரிடமும் அவரை ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அந்த 8 வயது சிறுமி சாலையில் கார் ஓட்டிச் சென்றது தொடர்பான வீடியோ, வேறொரு காரின் Dashcam-ல் பதிவாகி அவை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் பலரும் 8 வயதிலேயே பணம் எடுத்துக் கொண்டு ஷாப்பிங்கில் காரில் கிளம்புவது என்றால் அந்த சிறுமிக்கு எந்த அளவுக்கு புத்தி இருக்கும் என வேடிக்கையாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.