அரசு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இன்று தனியார் நிறுவனங்களிலும் நாம் தினந்தோறும் கஷ்டப்பட்டு பணிபுரிந்தால் கூட நமது முழு சம்பளத்தை வாங்குவதற்குள் உயிரே போய்விடும். வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்திற்கு மத்தியில் நாமும் எந்தளவுக்கு வேகமாக வேலை செய்கிறோமோ அப்போது தான் அதற்கான ஊதியத்தைப் பெற்று இங்கே தினசரி வாழ்க்கையை பராமரிக்கவும் முடிகிறது.
அப்படி ஒரு சூழலில் சுமார் பத்து ஆண்டுகளாக அரசு அதிகாரி ஒருவர் சரியாக பணிபுரியாமல் முழு சம்பளத்தை போனஸையும் வாங்கிக் கொண்டிருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்று பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி தாய்லாந்து நாட்டின் Ang Thong என்ற மாகாணத்தில் உள்ள பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு துறையில் அரசு அதிகாரியாக இருந்து வரும் நபர் ஒருவர், தனது அரசாங்க பணியை நேராக செய்யாமல் இரவு நேரத்தில் அங்குள்ள கிளப்பில் பாடகராக இருந்து வந்துள்ளார். அலுவலகம் செல்வதே சில பத்திரங்களில் கையெழுத்து விடுவதை மட்டுமே வேலையாக வைத்து மற்ற நேரம் அலுவலகம் செல்லாமலே இவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தவிர மேயரிடமிருந்து கண்டனங்கள் வரும் போதும் அலுவலகம் சென்று வந்துள்ளார் அந்த நபர். மேலும் இரவு நேரத்தில் இவர் பாடகராக இருந்து வந்ததால் அதனை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை பணிபுரியவும் விரக்தியாக உணர்ந்துள்ளார். இதன் காரணமாக அலுவலகத்திற்கு ஒழுங்காக செல்லாமல் 10 ஆண்டுகள் ஓட்டி வந்த சூழலில் தான் ஒரு facebook பக்கத்தின் மூலமாக இந்த நபரின் வேலை மோசடி அம்பலமாகியுள்ளது.
இத்தனை நாட்கள் அவருக்கு தெரிந்த அதிகாரிகளுக்கு மத்தியில் அவர்களின் உதவியுடன் தான் வேலைக்கு செல்லாமல் இவர் சம்பளத்தையும், போனஸையும் வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் அரசு வேலை கிடைப்பது பலருக்கு தவமாக இருந்து வரும் நிலையில் அது கிடைத்த பின்பும் சரியாக பயன்படுத்தாமல் இப்படி சர்வ சாதாரணமாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது ஆவேசமாக பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சம்பளம் வாங்கியது ஒரு பக்கம் இருந்தாலும் அதைவிட அவர் போனசும் சரியாக வந்து கொண்டு இருந்தது என்பது தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த அளவுக்கு அலட்சியமாக ஒருவரால் இருக்க முடியுமா என்ன பலரும் குறிப்பிட்டு வரும் சூழலில் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்குவது தான் சரியான முடிவாக இருக்க வேண்டும் குறிப்பிட்டு வருகின்றனர். தினந்தோறும் உழைத்தாலே சம்பளம் கிடைப்பதற்கு சிரமமாக இருக்கும் நிலையில் இப்படி ஒருவர் இருந்துள்ளது நிச்சயம் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி தான்.