விமான கட்டணத்துக்கு நிகரா டோல்கேட் கட்டணம்.. மயிலை எம்.பி. கடும் கண்டனம்

By John A

Published:

சென்னையில் விமான நிலையத்தில் டோல்கேட் கட்டண வசூலிப்பு கட்டாயமாக நடைபெறுவதாக மயிலாடுதுறை எம்.பி. சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனியார் தனது எக்ஸ்தளப் பக்கத்திலும், தனியார் செய்திச் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, டெல்லியிலிருந்து இன்று அதிகாலை 1.35 மணியளவில் நான் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினேன். அப்போது வெளியே செல்லும் போது தடுப்புகளை வைத்து மறைத்து இந்த வழியாகச் செல்ல அனுமதி இல்லை எனவும், டோல்கேட் வழியாக கட்டணம் செலுத்தி விட்டுச் செல்லுமாறும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

அப்போது நான் எம்.பி. என்று கூறியதும், அடையாள அட்டையை எடுத்துக் காட்டச் சொன்னார். நான் அடையாள அட்டையை காட்டிய பிறகும் என்னை விட மறுத்தனர். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்னிடம் வந்து இது ரொம்ப நாளாக நடந்துகிட்டு இருக்கு.. இப்படித்தான் செய்றாங்க.. இதற்கு ஒரு விடிவு காலம் வேண்டும். நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே நான் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறிய போது அவர்கள் அங்குள்ள ஊழியர்களை அழைத்து என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்.

மிஸ் இந்தியாவாக குஜராத் மாடல் அழகி தேர்வு.. மகுடம் அணிவித்த நடிகை ஊர்வசி ரவுட்டேலா

நான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம். நடவடிக்கை எடுங்கள். இது மக்களுக்கான பிரச்சினை என்றேன். ஆனால் திரும்பவும் எனக்கு அதே பிரச்சினை நடந்த காரணத்தினால் தான் நான் டிவிட்டரிலும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் பதிவு செய்தேன். ஒரு மாபியா கும்பல் போல் உட்கார்ந்து வசூல் செய்கின்றனர். ஏர்போர்ட் உள்ளே சென்றால் 10 நிமிடம் வாகன நிறுத்தம் இலவசம். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இருமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இப்படி ஏர்போர்ட்டில் கொள்ளையடிப்பது அநிநாயம், அக்கிரமம்.

ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை. யார் கான்ட்ராக்டர், யார் இவர்களை வேலைக்கு அமர்த்தியது, இவர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதா என விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உள்ளே சென்று இருமடங்கு, மும்மடங்கு கட்டணம் செலுத்துவது விமானக் கட்டணத்திற்கு இணையாக கொடுப்பது போல உள்ளது. ஏர்ப்போட்டில் உள்ள டோல்கேட்டுகளை நீக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.” என்று அவர் தெரிவித்தார்.