இந்தியாவின் 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோவில்.. பின்தங்கிய பிற நிறுவனங்கள்..!

By Bala Siva

Published:

 

உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், இன்டர்நெட் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைதான் தற்போது உள்ளது.

இந்த நிலையில், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இடையே போட்டிகள் அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோ வாடிக்கையாளர்களாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஜியோ பைபர் என்ற இன்டர்நெட் நிறுவனம் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் முன்னணியில் உள்ளதுடன், ஒவ்வொரு நாளும் இந்நிறுவனத்திற்கு கிடைக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாரதி ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ஏசிடி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், ஜியோ ஏர் பைபர் பல இடங்களில் இணைப்புகள் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கும் செட் ஆப் பாக்ஸ் அவர்களுக்கேற்றவாறு இருப்பதாகவும், போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்டு என இரண்டு வித வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 50% வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம் இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், 5G அலைக்கற்றை வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: BSNL, internet, jio