1980 களில் தமிழ் சினிமாவின் பிரபலமாக இருந்த நடிகைகளுள் ஒருவர் நளினி. இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். மோகன்லால் மம்முட்டி விஜயகாந்த் சத்யராஜ் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்து பிரபலமானவர் நளினி.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி அவர்களின் தந்தை தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியா நடன இயக்குனர் மற்றும் இவரது தாயும் தொழில் முறை நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், கனடா தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நளினி.
1980 ஆம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நளினி தொடர்ந்து ஓம் சக்தி, மனைவி சொல்லே மந்திரம், சமயபுரத்தாளே சாட்சி, நான் பாடும் பாடல், நூறாவது நாள், வீட்டிற்கு ஒரு கண்ணகி, நியாயம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார் நளினி.
பல அம்மன் பக்தி படங்களில் நடித்து பெண்களின் ஆதரவை பெற்றவர் நளினி. சின்னத்திரையில் பிரபலமாக ஓடிய சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரிலும் நடித்திருக்கிறார். 1987 ஆம் ஆண்டு கிராமத்து நாயகன் என்று அழைக்கப்பட்டு பிரபலமாக இருந்த ராமராஜன் அவர்களை காதலித்து மணந்து கொண்டார். இவர்களது திருமணத்தை பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் நளினி.
அவர் கூறியது என்னவென்றால் நானும் ராமராஜனும் காதலித்தோம் எங்கள் வீட்டில் ஒத்துக்கல. நான் ஷூட்டிங் போகும் போது எல்லாம் எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க. ஒரே ஒரு நாள் எங்க அம்மா மதியம் சாப்பிடறதுக்கு வீட்டுக்கு போனாங்க. ஒரு மணி நேரம் தான் அவங்க என் கூட இல்ல. அந்த நேரத்துல முகமூடி எல்லாம் போட்டு போயி ராமராஜன் அவர்களை கல்யாணம் பண்ணிட்டேன். அப்புறம் என் வீட்ல ரொம்ப பிரச்சினை ஆகிடுச்சு. ரொம்ப நாள் கழிச்சு தான் சமாதானம் ஆனாங்க என்று ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார் நளினி.