சச்சினின் அரிதான சாதனையை உடைத்து டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பெயர் பொறித்த அஸ்வின்..

By Ajith V

Published:

இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் ஒருமுறை மிக சிறப்பான ஆட்டத்தை வங்கதே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடத்தி பல சாதனைகளையும் தற்போது புரிந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தா மற்றும் மும்பை மைதானங்களில் போட்டிகள் நடந்தால் எப்படி ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடுவார்களோ அதற்கு நிகராக சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ரசிகர்கள் மிகச் சிறப்பாக கிரிக்கெட் போட்டியை கொண்டாடி வருவார்கள்.

அந்த வகையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி மூன்றரை நாட்களில் நடந்த போதிலும் இதனை முழுதும் அங்கு வந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடவும் செய்திருந்தனர். கிரிக்கெட் போட்டிகள் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருப்பதால் அதனை மிக நுணுக்கமாக கவனித்து கொண்டாடவும் செய்வார்கள்.

அப்படிப்பட்ட சென்னை மண்ணில் இருந்து வந்த கிரிக்கெட் அரங்கின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் அசத்தலான ஒரு ஆட்டத்தை ல் ரவுண்டராக வெளிப்படுத்தி இருந்தார். முதல் இன்னிங்சில் கில், ரோஹித், கோலி, ராகுல் என பல முன்னணி பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய போதிலும் ஜடேஜாவுடன் சேர்ந்து கொண்டு இந்திய அணியை சிறப்பாக மீட்டெடுத்ததுடன் மட்டுமில்லாமல் டெஸ்ட ரங்கில் தனது ஆறாவது சதத்தையும் அஸ்வின் பதிவு செய்திருந்தார்.

பேட்டிங்குன் மட்டும் அப்படியே விட்டுவிடாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 515 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியை 234 ரன்களில் சுருட்டியதற்கும் முக்கிய பங்கை அஸ்வின் வகித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்சில் சதம் அடித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 10 முறை ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ள நிலையில், அவர்களை தொடர்ந்து தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் 10 து ஆட்ட நாயகன் விருதினை வென்றுள்ளார். ஆனால் அதே வேளையில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது என இரண்டையும் சேர்த்து அதிக முறை வென்றுள்ள பெருமையை தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரண்டையும் சேர்த்து 19 முறை சச்சின் டெண்டுல்கர் வென்றிருந்தார். அதனை ஏற்கனவே சமன் செய்திருந்த அஸ்வின் தற்போது தொடர் நாயகன் விருதை வென்றுள்ளதால் இருபதாவது முறையாக இரண்டு விருதுகளையும் சேர்த்து சச்சினின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை இந்திய வீரராக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.