பெங்களூரில் 26 வயது இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரன்

By Keerthana

Published:

பெங்களூர்: பெங்களூர் வயாலிகாவல் அருகே ஒரு வீட்டில் 26 வயது இளம்பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக கூறு போட்டு பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி விநாயகா நகர். அங்கு ஒரு வீட்டில் 26 வயது இளம்பெண் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் கிடந்தது. வீட்டில் இருந்த துர்நாற்றம் வீசியபடி இருந்தது. நேற்று இளம்பெண்ணின் குடும்பத்தினர் வந்து பார்த்தார்கள். மேலும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்தது போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜ்) உடல்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. யாரோ மர்மநபர் மகாலட்சுமியை கொன்று உடலை கூறு போட்டு பிரிட்ஜில் வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் அங்கிருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். பின்னர் பிரிட்ஜில் 30 துண்டுகளாக இருந்த உடல்களை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலையான பெண் நேபாளத்தை சேர்ந்த மகாலட்சுமி (வயது 26) என்பதும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஹேமந்த் தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, நெலமங்களாவில் வசித்து வந்ததும் தெரியவந்தத. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்த மகாலட்சுமி, பெங்களூருவில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். தினமும் மகாலட்சுமியை அழைத்து சென்று விடுவதற்கு வாலிபர் ஒருவர் வந்து செல்வாராம்.

கடந்த 2-ந் தேதியில் இருந்து மகாலட்சுமி வேலைக்கு செல்லவில்லை . அவரது செல்போனுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை. நேற்று மகாலட்சுமியை பார்க்க அவரது தாய் மற்றும் சகோதரி வந்தனர்.. அப்போது தான் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டு, துண்டாக கூறு போடப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. மகாலட்சுமியை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை நடந்தது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.