மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகர் ஆவார். 1980களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மட்டும் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மோகன்.
ஆரம்பத்தில் கன்னட திரை உலகில் அறிமுகமான மோகன் 1980 ஆம் ஆண்டு மூடுபனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். 1980களில் மோகன் திரைப்படங்கள் பெரும்பாலும் அதிக நாட்கள் ஓடி ஹிட் ஆவதால் இவரை வெள்ளி விழா நாயகன் என்று மக்கள் அழைத்தனர்.
தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, இரட்டைவால் குருவி, விதி, நூறாவது நாள், மனைவி சொல்லே மந்திரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் மோகன். மௌனராகம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவி புகழ்பெற்றார் மோகன். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது. இன்றளவும் எவர்கிரீன் ஆக இருக்கிறது.
1990 களுக்கு பிறகு விஜய் அஜித் ஆகியோர் வருகையால் மோகனுக்கு வாய்ப்புகள் சற்று குறைய ஆரம்பித்தது. 2000 களின் பிற்பகுதியில் சினிமாவில் இருந்த சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு ஹரா என்ற திரைப்படத்திலும் கோட் திரைப்படத்திலும் நடித்து கம்பேக் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மோகன் மணிரத்தினம் இயக்கியா அஞ்சலி படத்தில் நடிக்காததற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அவர் கூடியது என்னவென்றால் அஞ்சலி படத்தில் நான் தான் நடிக்க இருந்தது. அப்போது அந்தப் படத்துல ஒரே ஒரு கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்ல. ஒரு ஸ்பெஷல் குழந்தையை தனி ரூம்ல வைக்கணும்னு சொல்லுவாங்க. அப்போ நான் இது நல்லா இல்ல ஸ்பெஷல் சைல்ட் எப்பவும் அம்மா அப்பா கூட தானே இருப்பாங்க தனி ரூம் கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அது ஒத்துவரல. அந்த ஒரு காரணத்துக்காக தான் அந்த படத்துல நான் நடிக்காமல் விலகிட்டேன் என்று ஓபனாக கூறியிருக்கிறார் மோகன்.