உண்மையாவே அடுத்த ஸ்டார் தான் போல.. சச்சின், கோலிக்கு பிறகு கில் மட்டுமே செஞ்ச தனித்துவமான சாதனை..

By Ajith V

Published:

சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரின் வரிசையில் மிக முக்கியமான ஒரு சாதனையை டெஸ்ட் அரங்கில் சுப்மன் கில் படைத்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். தற்போது இளம் வீரர்கள் பலரின் ஆட்டத்திற்ன் மிகச் சிறப்பாக இருந்து வருவதுடன் மட்டுமில்லாமல், சீனியர் வீரர்கள் பலருக்கும் கூட இவர்கள் சவாலாக விளங்கி வருகிறார்கள்.

கில், ருத்துராஜ், ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப், துருவ் ஜூரேல், சர்பராஸ் கான் என பல இளம் வீரர்கள் மிகவும் நுணுக்கமாக தங்களின் கிரிக்கெட் திறனை அறிந்து ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த தலைமுறை இந்திய அணியும் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர்.

இளம் வீரர்கள் அதிகம் இடம்பெறுவதன் காரணமாக நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தாலும் ஒரு பக்கம் நிறைய விமர்சனங்களும் எழுந்து தான் வருகிறது. உதாரணத்திற்கு கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து இடம்பிடித்து டி வருவதால் ருத்துராஜிற்கான வாய்ப்பு இந்திய அணியில் பெரிதாக கிடைக்கவே இல்லை.

இதே போல பந்து வீச்சாளர்களிலும் சரியான வீரர்களை இந்திய அணி தேர்வு செய்யாமல் இருக்க ஒரு சில முடிவுகளும் கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது. இதில் கில்லை தற்போது பலரும் பாராட்டி வருவதுடன் மட்டுமில்லாமல் ரோஹித் ஷ்ர்மாவுக்கு பிறகு இந்திய அணியை அனைத்து வடிவிலும் வழிநடத்த போகும் கேப்டனாகவும் இருப்பார் என புகழாரம் சூட்டியும் வருகின்றனர்.

கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய அணியில் இருப்பவர்கள் இப்படி தெரிவித்தாலும் ரசிகர்கள் பலரும் இதனை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில், அதன் பின்னர் சில முக்கியமான தொடர்களில் பெரிய அளவில் சொதப்பி இருந்தார்.

ஆனாலும் அவரை அணியிலிருந்து மாற்றாமல் தொடர்ந்து அவருக்கான வாய்ப்பினை கொடுத்தது. இதே வேறொரு வீரர் இரண்டு போட்டிகளில் ஃபார்ம் அவுட்டாகி இருந்தால் அவரை உடனடியாக அணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பினை கொடுத்திருப்பார்கள். இதனால் கில்லுக்கு மட்டும் ஏன் இந்த சிபாரிசு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

அப்படி ஒரு சூழலில் தான் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்திருந்தார் கில். இதனால் அவர் மீதான விமர்சனமும் இருமடங்காக உயர வேறு வீரர்களுக்கு வாய்ப்பினை கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலுவாக எழ தொடங்கியது.

இப்படி பல விமர்சனங்கள் தன் முன்னால் இருக்க இரண்டாவது இன்னிங்சில் சதமடித்ததுடன் மட்டுமல்லாமல் வங்கதேச அணிக்கு சவாலான இலக்கை எட்டவும் உதவி செய்திருந்தார். 119 ரன்களை கில் அடித்திருந்த நிலையில் தான் கடந்த 50 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரராக ஒரு சிறப்பான பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் இரண்டே இரண்டு இந்திய வீரர்கள் தான் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி இரண்டாவது இன்னிங்சில் சதத்தை அடித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1999 ஆம் ஆண்டிலும், விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி 2 து இன்னிங்சில் சதமடித்திருந்தனர்.

சச்சின், கோலியை போல ஒவ்வொரு தலைமுறையின் சிறந்த வீரராக இருந்தவர்கள் வரிசையில் தற்போது கில்லும் அந்த இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.