ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

 

டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும், நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இதுவரை பொதுமக்கள் ஆயிரம் கணக்கில், லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் பணத்தை ஏமாந்து வந்த நிலையில், அமெரிக்காவில் ஒரு வங்கியே ஆன்லைன் மோசடி மூலம் திவால் ஆகி இருக்கிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு முக்கிய வங்கியில் நிர்வாகியாக ஷான் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரிடம் திடீரென ஆன்லைன் மூலம் ஒரு இளம் பெண் அறிமுகமானார். அவரது அன்பு மொழிகளால் ஆர்வப்பட்ட ஷான், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யச் சொன்னதால், அந்த பெண்ணை நம்பி தன்னுடைய சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்தார்.

தினமும் கிட்டத்தட்ட அந்த பெண் ஒரு மணி நேரம் ஷானிடம் அன்புடன், காதலுடன் பேசியுள்ளார்.  ஒரு கட்டத்தில், அவரது பேச்சை நம்பி, தன்னுடைய வங்கியில் உள்ள முதலீட்டாளர்களின் ஓய்வு கால வைப்பு பணம், பிக்சட் டெபாசிட்டுகள் உட்பட, அனைத்து பணத்தையும் அந்த இளம்பெண் சொன்ன கிரிப்டோவில் முதலீடு செய்தார்.

இந்த மோசடியாளர்களின் நோக்கமே, ஒரு நபரிடம் உள்ள அனைத்து பணத்தையும் பிடுங்குவது தான். அந்த வகையில், கடைசியில் தனது மகள் கல்லூரி கட்டணத்திற்காக வைத்திருந்த பணத்தையும் திருடி, ஷான் அந்த இளம் பெண்ணை நம்பி கிரிப்டோவில் முதலீடு செய்தார்.

மொத்த பணத்தையும் கறந்துவிட்டோம் என்பதை உறுதி செய்த மோசடியாளர் பெண், அதன் பிறகு தொடர்பை துண்டித்துவிட்டார். தன்னுடைய சேமிப்பு மட்டும் அல்ல, தன்னுடைய வங்கியில் உள்ள முதலீட்டாளர்களின் சேமிப்பும் போய்விட்டது என்பதனால், அதிர்ச்சி அடைந்த ஷான், தான் ஏமாற்றப்பட்டதை ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் தான் உணர்ந்தார்.

ஒரு இளம் பெண்ணின் காதலான பேச்சுக்களை நம்பி, மொத்த பணத்தையும் இழந்து விட்டார் என்று அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் பணிபுரிந்த வங்கியும் திவால் ஆகிவிட்டது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட காவல்துறையினரால் மீட்க முடியவில்லை. ஒரு மோசடி கும்பல், ஒரு தனிநபரை மட்டுமல்லாமல், ஒரு வங்கியையே திவாலாக வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...