இங்கு சைவ உணவுகள் உண்ணும் ஆட்கள் நிறைய பேர் இருந்தாலும் இன்னொரு பக்கம் அசைவ பிரியர்கள் லெவலுக்கு வருவது என்பது சற்று இயலாத காரியம் தான். சைவ உணவில் இருக்கும் வகைகளை விட அசைவ உணவுகளில் ஏராளமான வகைகளும் ரகம் ரகமாக இருப்பதால் பலரும் அதனை தேடி தேடி உண்டு வருகின்றார்கள்.
சிக்கன், மட்டன், பீஃப் என எதை எடுத்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ப நிறைய வித்தியாசமான உணவு வகைகளும் தயாரிப்பதால் இதற்கு ரசிகர்கள் கூட்டம் கோடிக்கணக்கில் உள்ளனர். அதிலும் மட்டன், பீஃப்பை விட சிக்கன் என்று வந்து விட்டாலே பலருக்கும் மிகப்பிரியம் தான்.
கேஎப்ஃசி உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கும் அவர்கள் தயாரிக்கும் சிக்கன் உணவுகள் தான் காரணமாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை என வந்து விட்டால் பேச்சுலர்கள் பெரிதும் சிக்கனையும் உண்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு எதிராக பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் உடலுக்கு என்ன தேவையோ அதற்கேற்ப அசைவ உணவுகளையும் பலர் உண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஃபிரைடு சிக்கன் போல இருக்கும் ஒரு வீடியோ பெரிய அளவில் இணையத்தில் வைரலானதுடன் தற்போது 13 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. வெறுமன ஒரு சைடு சிக்கன் பீசில் என்ன இருக்கிறது என்று தேடிப்போய் பார்த்த இணையவாசிகள் அனைவருக்கும் மிகப்பெரிய வியப்பு தான் காத்திருந்துள்ளது.
UK பகுதியைச் சேர்ந்த Dayeeta Pal என்ற பெண் ஒருவர், புதுமையான வடிவில் கேக்களை தயார் செய்து வருகிறார். இவர் டவ்வல் போலவும், ஹேண்ட் பேக் போலவும், செருப்பு போலவும் விதவிதமாக தனக்கு தோன்றுவது போன்ற வடிவில் கேக்கை தயாரித்தும் வருகிறார். அதை வெளியிலிருந்து நாம் பார்ப்பதற்கு கேக் போல இல்லாமல் எந்த பொருட்களை போல வடிவமைக்கிறாரோ அதே போல மிக தத்ரூமமாகவும் இருந்து வருகிறது.
அந்த வகையில் தான் சமீபத்தில் சிக்கன் லெக் பீஸ் வடிவில் கேக் ஒன்றையும் தயீதா பால் தயார் செய்துள்ளார். வெளிப்புறத் தோற்றத்தில் இருந்து பார்ப்பதற்கு அப்படியே ஃப்ரைடு சிக்கனை ஜெராக்ஸ் எடுத்து வைத்தது போல இருந்தாலும் அதனை அவர் வெட்ட தொடங்கும் போது அப்படியே உள்ளே கேக் இருப்பதால் பலரும் இதை பார்த்து வியந்து போய் கிடக்கின்றனர்.
விதவிதமான வடிவமைப்பில் கேக்கை தயார் செய்தாலும் அது பார்ப்பதற்கு நிஜமான பொருள் போல இருப்பது தான் இந்த தயீதா பாலின் சிறப்பம்சமாக இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், மிக நுணுக்கமாக இதை அவர் தயாரித்து வருவதும் அதிகம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.