வீடியோ – இந்த குழந்தை மாதிரி வைப் பண்ணுங்கபா.. இணையத்தையே ஆக்கிரமித்த நேபாளி லிட்டில் கேர்ளின் வீடியோ.. ப்பா, செம க்யூட்ல..

By Ajith V

Published:

நம்மை சுற்றி இன்று பல எதிர்மறையான விஷயங்களும், மனம் வருந்தக்கூடிய தொடர்பான சம்பவங்கள் நடந்தாலும் கூட இன்னொரு பக்கம் நம்மை தேற்றிக் கொண்டே இருக்கும் நிறைய நிகழ்வுகளையும் நாம் கவனித்துக் கொண்டே இருப்போம். அந்த அளவுக்கு மனதில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் சிலருக்கு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றும் புத்தகம் படிக்க வேண்டும் என்றும் அல்லது தங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் நினைப்பு வரும்.

இதையெல்லாம் தாண்டி இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை அறியாமலே சில வீடியோக்களையோ அல்லது செய்திகளையோ பார்க்கும் போது ஒருவித மகிழ்ச்சி மனதில் தோன்றும். அந்த மாதிரி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம் .
மழலை கொஞ்சும் குழந்தைகள் சிரித்தாலும், பேசினாலும், கோபப்பட்டாலும் கூட அவர்களைப் பார்ப்பது அழகாக இருக்கும்.

சிறுமியின் வைரல் டான்ஸ்

அதிலும் பெண் குழந்தைகள் இது போன்ற விஷயங்களை செய்து நாம் பார்க்கும்போது வரும் சந்தோஷம் வேறு எந்த விஷயங்களிலும் நமக்கு கிடைக்காது. அந்த வகையில் நேபாள் நாட்டில் உள்ள பெண் குழந்தை ஒருவர் பள்ளி சீருடையில் தனது சக தோழிகளுடன் இணைந்து ஒரு நேபாளி பாடலுக்கு நடனம் ஆடவும் செய்கிறார். வழக்கமான ஒரு குழந்தைகளின் நடனமாக மட்டுமில்லாமல் அந்த சிறுமியின் முக பாவனைகள் தொடங்கி அசைவுகள் என ஒவ்வொரு விஷயமும் அப்படியே நம் நெஞ்சை கவரும் வகையில் அமைந்துள்ளன.

அசத்திய முக பாவனைகள்

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கே பலரும் தயங்கி தயங்கி அழுது கொண்டே போகும் சூழலில் தற்போது உள்ள குழந்தைகள் மிக ஜாலியாக அதே நேரத்தில் தனது தங்களின் நட்பு வட்டாரத்துடன் நேரத்தையும் கழிக்கின்றது. அந்த வகையில் தான் இந்த சிறுமியும் தனது தோழிகளுடன் சேர்ந்து ஒரு நேபாளி பாட்டிற்கு மிக அசத்தலாக நடமாடுவது தொடர்பான வீடியோ இணையத்தை அதிகம் ஆக்கிரமித்துள்ளது.

இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவர் சிறு வயதிலேயே ஒரு சிறந்த நடன கலைஞராக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகிறது என்றும் மிக நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் நடனத்தை விட அந்த சிறுமியின் முகபாவனைகள் அசத்தலாக இருப்பதாக பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் இந்த சிறுமியை போல வைப் செய்து அனைத்தையும் ஜாலியாக கடந்து வர வேண்டும் என்றும் பலர் உத்வேகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.