அழுதேன்.. கைதட்டினேன்.. நந்தன் படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் சொன்ன ‘நச்’ பாராட்டு..

By John A

Published:

Nandan: நடிகர் சசிக்குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் நந்தன். உடன்பிறப்பே, கத்துக்குட்டி ஆகிய படங்களை இயக்கிய இரா. சரவணன் இப்படத்தினை தயாரித்து இயக்கியிருக்கிறார். சசிக்குமாருடன், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சசிக்குமார் எப்படி ஊராட்சி மன்றத் தலைவராக வருகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். இப்படத்தினை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தினைப் பாராட்டி பேசியிருக்கிறார். அதில், “சசிக்குமார் வித்யாசமாக நடித்திருக்கிறார் என்பதை அறிந்து இப்படத்தினைப் பார்த்தேன். முதல் காட்சியிலேயே இரா. சரவணன் கொடுத்த விதம் இப்படம் வேறு ஏதோ சொல்லப்போகிறார்கள் என்பதை உணர்த்தியது.

தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிக மிக யதார்த்தமாக உண்மைக்கு மிக நெருக்கமாக நந்தன் படத்தில் சசிக்குமார் நடித்திருக்கிறார். இந்தப் படத்தினைப் பார்த்து நிறைய இடத்தில் சிரித்தேன்.. நிறைய இடத்தில் யோசித்தேன்.. நிறைய இடத்தில் கண் கலங்கினேன்…கடைசியாக நல்ல வேகமாக கைதட்டினேன்.. இவை எல்லாவற்றையும் ஏற்படுத்தியது இரா. சரவணனின் எழுத்தும் அவரது டீமும் தான்.” என்று படக்குழுவினரை வாழ்த்திப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பொதுவாக சசிக்குமாரின் கதாபாத்திரங்கள் ஆதிக்கச் சாதியினரை வைத்தே எடுக்கப்படும். ஆனால் இந்தப் படத்தில் தலித் இளைஞராக நடித்திருக்கிறார். சாதிய அடக்குமுறை, சமூக நீதி, ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கச் சமூகத்தினர் தலித் மக்களை அடிமைப்படுத்துவது என பலவற்றைக் கையில் எடுத்து அதனை அற்புதமாக அம்பேத்குமார் என்ற சசிக்குமார் மூலம் நந்தனாகப் பதிவு செய்திருக்கிறார் இரா.சரவணன்.

மேலும் உங்களுக்காக...