தாலாட்டுப் பாட்டை குத்துப் பாட்டாக மாற்றிய இளையராஜா..இரண்டுமே சூப்பர் ஹிட் பாடலாக மாறிய சீக்ரெட்

By John A

Published:

பொதுவாக இயக்குநர் காட்சிகள் சொல்ல அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு இசையமைப்பாளர்கள் இசையமைத்துக் கொடுப்பர். படத்தின் உயிர் நாடியே இசைதான். இசை மூலமாகத்தான் நடிகர் நடிகைகள் நடிக்கும் அனைத்து உணர்வுகளையும் ரசிகனுக்கு எளிதாக விளக்க முடியும். இப்படி மனதை உருகச் செய்து, ரசிகனின் மனதில் புகுந்து பல்வேறு வித்தைகளைக் காட்டுபவர்தான் இசைஞானி இளையராஜா.

மணிரத்னம் இளையராஜா கூட்டணியில் வந்த படங்கள் அனைத்துமே பிளாக் பஸ்டர். பகல் நிலவு, நாயகன், அஞ்சலி, தளபதி, அக்னி நட்சத்திரம் போன்ற படங்களின் இசை இன்றளவும் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியவை. அதிலும் நாயகன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தானவை.

கமல்ஹாசன், மணிரத்னம், பாலகுமாரன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து உலகசினிமாக்களில் போற்றப்படக் கூடிய ஓர் ஒப்பற்ற திரைப்படத்தினைக் கொடுத்தனர். உலகின் சிறந்த 100 படங்களை எடுத்துக் கொண்டால் அதில் நாயகனும் கண்டிப்பாக இடம்பெறும்.

என்னது அவரோட ஜோடியா? நடிக்க மறுத்த சுகாசினி..வேறு வழியின்றி கைவிட்ட கே.பாலச்சந்தர்..

இப்படி நாயகன் பட பெருமைகளைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். நாயகன் படத்தில் இடம்பெற்ற தென்பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே.. பாடலைக் கேட்டால் கல் மனசுக் காரரும் கலங்கி விடுவார்கள். பாடலைக் கேட்டாலே கண்களில் நீர் ஊற்றெடுக்கும். இப்படிப்பட்ட எமோஷனலான பாடலுக்கு இளையராஜா முதலில் போட்ட மெட்டு எது தெரியுமா? படத்தில் இடம்பெற்ற மற்றொரு ஐட்டம் பாடலான நிலா அது வானத்து மேல பாடலின் மெட்டு தான் தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு போடப்பட்ட மெட்டு.

மணிரத்னம் இந்த மெட்டைக் கேட்டு விட்டு இதை அப்படியே குத்துப் பாடலாக மாற்றித் தாருங்கள். தாலாட்டுப் பாடலுக்கு வேறு டியூன் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இப்படித்தான் தென்பாண்டிச் சீமையிலே பாட்டின் மெட்டை நிலா அது வானத்து மேல பாடலின் மெட்டாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்த இரு பாடல்களுமே வரலாறு படைத்தன.