எம்பிபிஎஸ் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் படிக்காமல் வெளியேறினால் ரூ.10 லட்சம் அபராதம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பபதிவு முடிவடைந்து கலந்தாய்வும் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் நாளை தரவரிசை பட்டியல் வெளியாக இருக்கும் நிலையில் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் தங்கள் விருப்பமின்மை காரணமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் இருந்து விலகி கொள்ளலாம். விருப்பமில்லாத மாணவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் இருந்து விலகினால், அபராதம் விதிக்கப்படாது. ஆனால், கால இடைவெளி முடிந்த பிறகு படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம், வைப்புத் தொகை மற்றும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.