ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது இரு மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவரின் கோல்டு தங்க பத்திரம் கடந்த 2017 15 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 ஆண்டுகளில் முதிர்வு தொகை கிடைக்கும் என்றும் எட்டு ஆண்டுகளுக்கு பின் உள்ள தங்கத்தின் விலையின் படி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அது மட்டும் இன்றி முதலீட்டுக்கு ஒவ்வொரு வருடமும் வட்டியும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதலீட்டு முதிர்வு எட்டு ஆண்டுகள் என்று கூறப்பட்டிருந்தாலும் 5 ஆண்டுக்கு பிறகு முதலீட்டாளர்கள் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியும் உள்ளே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தங்க பத்திரத்தை 2017, 18, 19ஆம் ஆண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது முதிர்வு தொகை கிடைக்கும் நிலை உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தங்க பத்திரத்தை ஒரு கிராம் 2943 என்று வாங்கிய நிலையில் தற்போது 7196 ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் 2019 ஆம் ஆண்டு தங்கத்தின் தங்கத்தின் விலை 3890 என இருந்த நிலையில் இன்று 7196 ரூபாய் கிடைக்கும் நிலையில் 5 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இரு மடங்கும் அதற்கு மேலும் லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இதில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.