தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். விஜய், அஜித் இவர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகராக மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழையும் போது இந்த மூஞ்சு என்னத்த சாதிக்க போகுது என்ற விமர்சனத்திற்கு ஆளானார். ஆனாலும் என்னாலும் முடியும். என்னையும் ஒரு நாள் எல்லாரும் அண்ணாந்து பார்ப்பீர்கள் என இன்று ஒரு உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து நிற்கிறார் தனுஷ்.
அவருடைய லட்சியத்தையும் அவர் அடைந்து விட்டார். போயஸ் கார்டனில் ரஜினி மாதிரியான பெரிய ஆளுங்கதான் வீடு வாங்க முடியுமா? என்னாலும் முடியும் என நிரூபித்திருக்கிறார். அவர் மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதை அடையும் வரை போராடுபவராக இருக்கிறார் தனுஷ்.
10 வருடங்களுக்கு முன்பு வரை தனுஷ் மீது நல்ல அபிப்ராயம் இல்லாத மாதிரி இருந்தது ரசிகர்களுக்கு. ஆனால் சமீபகாலமாக அவர் அடையும் சாதனை , விடாமுயற்சி இவற்றையெல்லாம் பார்க்கும் போது இந்த சின்ன வயதிலேயும் இப்படி ஒரு போராடும் குணமா என ஆச்சரியப்பட வைக்கிறது.
நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் என பன்முகத்திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக சிறந்து விளங்குகிறார் தனுஷ். இந்த நிலையில் பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த தனுஷ் ராயன் திரைப்படத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்ற பெயரையும் பெற்றார்.
ராயன் திரைப்படம் தனுஷ் இயக்கிய இரண்டாவது படம். இந்த நிலையில் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் தனுஷ்தான் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துக் கொண்டு எங்கேயும் நகர முடியாத ஒரு நடிகராக இருக்கிறார்.
அவருடைய 51வது படமான குபேரா படம் நடந்து வருகிறது. அதனை அடுத்து டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவருடைய 52வது படம் சம்பந்தப்பட்ட அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. இந்தப் படத்தை தனுஷ்தான் இயக்கி நடிக்கவும் போகிறார். அடுத்து 53வது படம் ஹிந்தியில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு அவருடைய 54வது படம்தான் இளையராஜாவின் பயோபிக்.
55 மற்றும் 56வது படங்கள் முறையே மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார்கள். அவர் லிஸ்ட்டை பார்க்கும் போது கிட்டத்தட்ட 10 வருடங்கள் மிகவும் பிஸியான நடிகர் தனுஷ் என்றே தெரிகிறது.