சின்னி ஜெயந்த் தமிழ் சினிமாவில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர், துணை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ஆவார். இது மட்டுமல்லாமல் சன் டிவியின் சகலை வெர்சஸ் ரகளை, கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார் சின்னி ஜெயந்த்.
தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு படிப்பை முடித்த சின்னி ஜெயந்த் 1984 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரனின் கை கொடுக்கும் காய் என்ற திரைப்படத்தில் வில்லனுக்கு துணைவேடத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து கீழ்வாசல், இதயம், கண்ணெதிரே தோன்றினாள், சின்ன புள்ள போன்ற திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானாலர் சின்னி ஜெயந்த்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார் சின்னி ஜெயந்த். 2000 ஆம் ஆண்டு உனக்காக மட்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சின்னி ஜெயந்த். அதற்கு அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு கானல் நீர் 2010 ஆம் ஆண்டு நீயே என் காதலி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சின்னி ஜெயந்த். இது மட்டுமில்லாமல் சில படங்களுக்கு டப்பிங் கொடுத்து டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார் சின்னி ஜெயந்த்.
சின்னி ஜெயந்த் அவர்களின் மகன் ஜெய் IAS தேர்வில் வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு கலெக்டராக இருந்து வருகிறார். ஒரு நகைச்சுவை நடிகர் தனது மகனை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று இவரை பலரும் பாராட்டினர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது மகன் ஜெய்க்கு வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் சினிமா துறையில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் கவுண்டமணியும் ஒருவர். அவரைப் பற்றி சின்னி ஜெயந்த் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
சின்ன ஜெயந்த் கூறியது என்னவென்றால் என் மகன் கல்யாணத்துக்கு கவுண்டமணி வந்திருந்தார். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மகன் திருமணத்திற்கு வந்தபோது என்னிடம் வந்து, ‘காலரை தூக்கி விட்டுக்கோ. ஒரு நகைச்சுவை நடிகரின் மகனது திருமணம் இவ்வளவு கிராண்டாக இதுவரை நடந்ததில்லை. உன்னை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’ என்று சொன்னாரு என்று மனம் திறந்து கூறியிருக்கிறார் சின்னி ஜெயந்த்.