எலக்ட்ரிக் கார் வாங்கினால் இலவச சார்ஜிங்: டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

By Bala Siva

Published:

எலக்ட்ரிக் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போட்டியின் காரணமாக எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் இரண்டு மாடல் எலக்ட்ரிக் கார்களை வாங்கினால் இந்தியா முழுவதும் சார்ஜிங் இலவசம் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு எலக்ட்ரிக் கார் வாங்குபவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சில குறிப்பிட்ட மாடல்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் தள்ளுபடி சலுகையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார் வாங்கினால் பெட்ரோல் டீசல் செலவு செய்ய வேண்டும் என்பது போல் எலக்ட்ரிக் கார் வாங்கினால் சார்ஜிங் செலவு செய்ய வேண்டும் என்பது அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு சார்ஜிங் சென்டர்களிலும் வித்தியாசமான விலை இருக்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் அதிரடியாக தங்கள் நிறுவனத்தின் Tata Punch EV அல்லது Nexon EV ஆகிய இரண்டு மாடல்கள் கார் வாங்கினால் இந்தியா முழுவதும் 5500 சார்ஜிங் பாயின்ட் இலவசமாக சார்ஜிங் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு எலக்ட்ரிக் கார் வாங்கும் பயனர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி 2 லட்ச ரூபாய் வரை எலக்ட்ரிக் கார் வாங்கும் நபர்களுக்கு சில மாடல்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து இனி வரும் நாட்களில் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள்  அதிகமாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டாடா நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் சார்ஜிங் கட்டணம் பெற்று வருகிறது. ஒரு கிலோமீட்டருக்கு 3.50 ரூபாய் மட்டுமே சார்ஜிங் கட்டணமாக பெற்று வரும் நிலையில் தற்போது மேற்கண்ட இரண்டு கார்களுக்கு முற்றிலும் இலவச சார்ஜிங் என்பது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.