தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது என்றும் அது ஒரு அணியும் ஆபரணம் மட்டுமின்றி சிறந்த முதலீடாகவும் இந்திய மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபோது தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்ட உடன் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, படுவீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்னவெனில் தங்கம் விலை உச்சத்திற்கு சென்று வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்படுவதை அடுத்து அமெரிக்க டாலர் இறங்கி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் அறிவிப்பு வெளியானால் தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு காரணமாக பங்குச்சந்தைகயில் தங்கம் சார்ந்த பங்குகள் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பாக ஜுவல்லரி நிறுவனங்களின் பங்குகள், தங்கத்தின் மீது கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடு என்றும் ஒரு சில காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருப்பதால் தங்கத்தின் முதலீடு செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.