தலைநகர் புதுடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபானக் கொள்கையால் முறைகேடு செய்திருப்பதாக வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார் ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் ஏற்கனவே அம்மாநில துணை முதலமைச்சர் மனீஷா சியோடியா கைது செய்யப்பட்டிருந்தார்.
அமலாக்கத்துறையும், சி.பி.ஐ ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இதனால் சி.பி.ஐ-ஆல் மீண்டும் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். எனினும் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார்.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்சல் ஆகியோர் அடங்கிய பென்ச் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
விண்வெளியில் சுற்றுலா.. அசத்தலாக இறங்கி ஒய்யார நடைபோட்ட அமெரிக்க கோடீஸ்வரர்..
எனினும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அலுவல் ரீதியான எந்தக் கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்றும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும் செல்லக் கூடாது எனவும் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளனர். மேலும் சிபிஐ-க்கு விசாரணை நேர்மையாக நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்ததை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் டெல்லி அரசியலில் புதிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே கெஜ்ரிவால் மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பரோலில் ஒருமாதம் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.