AI மூலம் உருவாக்கப்பட்ட பாப் இசைக்கலைஞர்.. இன்னும் என்னவெல்லாம் வருமோ?

By Bala Siva

Published:

 

AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் பாப் இசைக்கலைஞர் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பாடி நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து அச்சு அசல் ஒரு பாப் இசை கலைஞர் நடனமாடி பாடுவது போன்றே இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

AI டெக்னாலஜி மிக குறுகிய காலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பல மனிதர்கள் சேர்ந்து பல நாட்கள் செய்யும் வேலையை டெக்னாலஜி ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்து விடுவதை அடுத்து இந்த டெக்னாலஜி மிக வேகமாக பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சினிமா துறை முதல் மருத்துவ துறை வரை அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் தற்போது இசைத்துறையிலும் நுழைந்துவிட்டது.  தென்கொரியாவை சேர்ந்த எஸ்எம் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் முதல் முறையாக AI மூலம் ஒரு பாப் இசை கலைஞரை உருவாக்கிய அகத்தி உள்ளது.

நாவிஸ் என்ற பெயரைக் கொண்ட இந்த பாப் இசை கலைஞர் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் AI இசைக்கலைஞர் அசத்தலாக பாட்டு பாடி நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளது. மனித உருவம் போல அச்சுஅசலாக இருக்கும் இந்த AI பாப் இசை கலைஞரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.