மேடைப்பேச்சில் சிறந்தவர் ரஜினியா? விஜயா? அவரு சொன்னது தான் சரி..!

By Sankar Velu

Published:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், விஜய்க்கும் காக்கா, கழுகு கதை ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சு பலமாக அடிபடும்போது தான் இந்தப் பேச்சு எழுந்தது. அப்போது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது வைரலானது.

காட்டுல சின்ன சின்ன மிருகங்கள் எல்லாம் எப்பவும் பெரிய மிருகங்களைத் தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். உதாரணத்துக்குக் காக்கா எப்பப் பார்த்தாலும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும்.

பறக்கும்போது கழுக பார்த்து உயரமா பறக்க முடியலையேன்னு ஃபீல் பண்ணும். இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா கழுகு இறக்கையைக் கூட அசைக்காம உயரத்துல பறக்கும்.

Rajni
Rajni

உலகின் உன்னதமாக மொழியே மௌனம் தான். இன்னைக்கு சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்போ இல்ல. 1977லயே வந்துட்டு. அப்போ எனக்கு ஒரு படத்துல அப்படிப் பட்டம் கொடுக்கும்போது வேணாம்னுட்டேன்.

ஏன்னா அப்ப கமல் என்னைவிட ரொம்பப் பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அதனால வேணாம்னுட்டேன். ஆனா நான் பயந்துட்டேன்னு சொன்னாங்க. நான் பயப்படுறது ரெண்டே பேருக்குத் தான். ஒண்ணு ஆண்டவனுக்கு. இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி நான் யாருக்கும் பயப்படறது இல்ல.

இந்தக் கதையைக் கேட்டதும் அவரைக் காக்கான்னு சொல்லிட்டாருன்னு போட்டுறாதீங்கன்னும் குறும்பாகச் சொன்னார் ரஜினி. இது ஒரு சின்ன உதாரணம் தான். இதே கேள்வியைப் பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் மேடைப்பேச்சில் சிறந்தவர் ரஜினி தான் என்றார்.

ரஜினி எனக்கு அப்பா மாதிரின்னாரு விஜய். ரஜினி லால் சலாம் படவிழாவில் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவருடைய படிப்படியான உழைப்பால இந்தளவுக்கு உயர்ந்துள்ளார்.

அவருக்கும், எனக்கும் போட்டின்னு சொல்வது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. யாரும் எங்களை ஒப்பிட்டு பேசாதீங்க. நான் சொன்ன காக்கா, கழுகு கதையை விமர்சித்து பலர் தவறாக புரிஞ்சிக்கிட்டாங்க. ரெண்டு பேரின் ரசிகர்களும் இனி ஒப்பிட வேண்டாம்.

என் படங்களுக்கு நான் தான் போட்டி. அவருக்கு அவர் போட்டி. எனக்கு அவரும், அவருக்கு நானும் போட்டின்னு நினைக்கறது கவுரவம் இல்ல. நான் என்றும் விஜயின் நலம் விரும்பிதான்னு சொல்லி ரஜினியே முற்றுப்புள்ளி வைத்துது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

விஜய் எப்படி பேசுவார் என்பதைப் பலரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். அவர் அரசியலில் இறங்கியதால் வரும் மாநாட்டில் அவரது பேச்சு அதிரடியாக இருக்கும் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.