இளையராஜா கொடுத்த வாழ்க்கை..! அப்படியாப்பட்ட மனோவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

By Sankar Velu

Published:

இந்த வாழ்க்கை எனக்கு இளையராஜா போட்ட பிச்சைன்னு சொன்னவர் பிரபல பாடகர் மனோ. ஆனா அவருக்கு இன்னைக்கு இந்த நிலைமையான்னு நினைக்கும்போது மனம் கனக்கத் தான் செய்கிறது. அவரது இரு மகன்கள் ஜாகிர், ரபிக் பண்ணிய வேலை தான் எல்லாத்துக்கும் காரணம். அவர்கள் ரோட்டில் வைத்து யாரோ ஒரு பையனைப் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.

அதுவும் குடி போதையில் என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் இவர்களுக்கு இதே வேலையாப்போச்சு. தண்ணியைப் போட்டு அடிக்கிறது தான்னு சொல்கிறார்கள். மனோவுக்கு ஏன் இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்தனர்? யார் இந்த மனோன்னு பார்க்க வேண்டியுள்ளது.

நாகூர் பாபு தான் இவரது சொந்த பெயர். ஆந்திராவில் உள்ள தெனாலியில் பிறந்தவர். சிறு வயது முதலே மேடையில் பாடுவதில் அலாதி ஆர்வம் இருந்தது. இசை ஆர்வம். அப்பா இசை ஆர்வம் கொண்டவர். அம்மா மேடை நாடக நடிகை. தெலுங்கு சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

Mano 2
Mano 2

அப்போது அவர் நல்லா பாடுவார்னு சொல்றாங்க. அப்போ எம்எஸ்வி. வருகிறார். அவருக்கு எஸ்.பி.யை வைத்து பாட வைக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. ஸ்டுடியோ வெயிட்டிங்கில இருக்கு. அதனால அங்கு உள்ளவர்கள் நாகூர் பாபு நல்லா பாடுவார்னு சொல்ல, அவரை அழைத்து வரச் சொல்கிறார்.

அவர் வந்ததும் பாடச் சொல்கிறார். பாடியதைக் கேட்டதும் அசந்து பேஷ் பேஷ் என்கிறார். உடனே எஸ்பிபி. பாடுவதற்குப் பதிலாக இவரைப் பாட வைக்கிறார். இங்க எதுக்கு கஷ்டப்படுற. சென்னைக்கு வந்து முயற்சி பண்ணு. பெரிய பாடகரா வருவன்னு எம்எஸ்வி சொல்கிறார். நானும் வாய்ப்பு கிடைக்கும்போது உன்னைப் பாட வைக்கிறேன்னு சொன்னார்.

அப்படி அங்கு வந்து வாய்ப்பு தேடி பெரிய ஆளானவர் தான் மனோ. ஸ்டார் ஓட்டல்ல போய் கிட்டார் வாசிப்பாரு. பாடுவாரு. இளையராஜாவுக்கும் எம்எஸ்விக்கு வந்த சூழலைப் போல அவருக்கும் உண்டாகிறது. இங்கும் எஸ்பிபி தான் லேட். அந்த இடத்தில் இளையராஜா டென்ஷன் ஆகிறார். யார் நல்லா பாடுவார்னு கேட்டா மனோவின் பெயர் அடிபடுகிறது. கீர்த்தனை பாடச் சொல்கிறார். அழகாகப் பாடுகிறார்.

உடனே பூவிழி வாசலிலே படத்தில் ‘அண்ணே அண்ணே’ பாடலை பாட வாய்ப்புக் கொடுக்கிறார். அது தான் அவருக்கு முதல் பாடல். இளையராஜா பாட வைத்தது. இளையராஜா இசையில் ராமராஜனின் பெரும்பாலான பாடல்களைப் பாடியவர் மனோ தான்.

மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.