Video : ஆசையா வாங்கிய சமோசாவுக்குள் திடீரென தெரிந்த கால்.. வாடிக்கையாளர் செஞ்ச விஷயம்.. பீதியை கிளப்பிய பின்னணி..

By Ajith V

Published:

என்னதான் வீட்டில் சுவையாக நாம் சமைத்து உண்டாலும் வெளியே உணவகங்களுக்கு சென்று விதவிதமாக உண்ண வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதுவும் பேச்சுலராக இருக்கும் நபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்காமல் தனியாக இருக்கும்போது வேலைக்கு நடுவே வீட்டில் சமைத்து உண்பதை விட வெளியே சென்று ருசியாக உண்ண வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார்கள்.

இப்படி வெளியே உணவகங்களுக்கு சென்று உண்ண வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்தாலும் இதில் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டால் நிச்சயம் மிகப்பெரிய கேள்விக்குறி தான். சிறிய வண்டி கடைகள் தொடங்கி பெரிய பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்கள் வரை எந்த அளவுக்கு நாம் உண்ணும் உணவு சுதாகரத்துடன் அளிக்கப்படுகிறது என்று கேட்டால் நிச்சயம் நாம் ஒரு நிமிடம் யோசிக்க தான் செய்வோம்.

இதற்கு காரணம் உணவுத்துறை அதிகாரிகள் பல உணவகங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அங்கே கெட்டுப் போயிருக்கும் பொருட்களை மீட்டு சீல் வைத்த சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளது. நாம் பணம் கொடுத்து தேவைக்கு உண்ண வேண்டும் என்று நினைத்தால் கூட அதில் சுகாதாரத்தை பேண முடியாமல் காசுக்கு தயங்கி பழைய உணவுகளையும் பலரும் சுவையாக தயார் செய்து கொடுக்கும் ஏராளமான உணவகங்கள் இங்கு இருப்பது இன்னும் ஒரு பெரிய எச்சரிக்கையாக தான் இருந்து வருகிறது.

அவ்வபோது உணவகங்களில் ஏதேனும் சாப்பிட்டு சிலர் உயிரிழந்து போனது தொடர்பான செய்திகளையும் நாம் நிறைய கேள்வி பட்டுள்ளோம். இன்னொரு புறம் நிறைய உணவகங்களில் பலரும் நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைத்த போதிலும் அனைத்து உணவகங்கள் மத்தியிலும் விழிப்புணர்வு இல்லாமல் தான் இருந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் உத்தர் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் சமோசாவை சமீபத்தில் வாங்கியுள்ளார். அப்போது சமோசாவை உண்ணத் தொடங்கிய சமயத்தில் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

அந்த சமோசாவுக்குள் இறந்து போன தவளையின் கால் தெரியவர உடனடியாக இதை பார்த்தவர் கொந்தளித்து போயுள்ளார். இந்த சமோசாவை கடையில் இருந்தவரிடம் காண்பித்து முறையிட்ட நிலையில் அங்கிருந்தவர்களும் இதனை அறிந்து பதறிப் போயுள்ளனர்.

மேலும் அந்த நபர் அடிக்கடி அங்கிருந்து சமோசாவை வாங்கி உண்டு வரும் சூழலில் இப்படி நடந்தது அவரை கடுமையாக கோபப்பட வைத்துள்ளது. உடனடியாக இது பற்றி போலீசாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட கடை மீது அவர்கள் நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மக்கள் நலன் கருதி சிறப்பாக உணவுகளை தயார் செய்யும்படி பல அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் இப்படியான சம்பவங்கள் நடந்து வருவது நிச்சயம் மக்கள் மத்தியில் பெரிய அச்சத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.