15 மாதங்களில் 27 நாடுகளுக்கு சென்ற நண்பர்கள்.. அதுவும் ஒரு விமானம் கூட ஏறாம.. எப்படின்னு ஆச்சரியமா இருக்கா..

By Ajith V

Published:

பொதுவாக நாம் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் விமான மூலம் பயணம் செய்வதே வசதியாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் வேகமாக நாம் சென்று வருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இங்கே நாள்தோறும் விமான சேவைகளும் அதிகமாக இயங்கி வருவதால் நிச்சயம் நாம் நினைக்கும் நாடுகளுக்கு தேவைப்படும் நேரத்தில் சரியாக திட்டம் போட்டால் சென்று விட்டு வந்து விடலாம்.

பெரும்பாலும் வேறு நாடுகளுக்கு செல்வதற்கு விமான பயணத்தை அனைவரும் விரும்பி வரும் சூழலில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து 27 நாடுகளை ஒரு விமானம் கூட ஏறாமல் பயணம் செய்துள்ள ஆச்சரிய பின்னணி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் தான் Tommaso Farinam மற்றும் Adrian Lafuente ஆகியோர். இதில் தாமஸோ இத்தாலி நாட்டை சேர்ந்தவர். ஆட்ரியன் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் தான் ஒன்றாக இணைந்து 15 மாதங்களில் 27 நாடுகள் பயணம் செய்தவுடன் அதில் ஒரு முறை கூட விமானம் ஏறவில்லை.

அது மட்டுமல்லாமல் விமானங்களை தவிர்த்த தாமஸோ மற்றும் ஆட்ரியன் ஆகிய இருவரும் கப்பல் மூலமாக பயணம் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணமாக மட்டும் இது இல்லாமல், இருவரின் செலவையும் மிக சிக்கனமாக இந்த உலகம் சுற்றுதலுக்கு குறைத்துள்ளது.

தாமஸோ மற்றும் ஆட்ரியன் ஆகிய இருவரும் படகு மூலம் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பியதுடன் மட்டுமில்லாமல் ஒரு முறை கப்பல் கேப்டன் ஒருவரை சந்தித்தபோது இப்படி ஒரு பயணம் மேற்கொள்ளும் தாங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். படகு மூலம் பயணம் மேற்கொண்டது அதிக நேரத்தை எடுத்துக் கொண்டாலும் செலவும் மிக சிக்கனமாக இருந்துள்ளது.

ஒருவர் தலா 7,700 டாலர்களை மட்டுமே செலவு செய்துள்ளனர். இந்திய மதிப்பில் ஏறக்குறைய 6,46,000 ரூபாய் வரை செலவாகி உள்ளது. 27 நாடுகளை அதுவும் 15 மாதங்களில் சிக்கனமாக பயணம் செய்துள்ள தாமஸோ மற்றும் ஆட்ரியன் ஆகியோருக்கு ஆரம்பத்தில் இந்த பயணம் அவர்களுக்கு பெரிய அளவில் சிறப்பாக அமையவில்லை.

முதல் பத்து நாட்கள் அவர்கள் பயணம் மேற்கொண்டபோது காற்றும் புயலும் அதிக அலைகளும் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சென்ற கப்பல் கவிழ்ந்து விடுமோ என்று கூட அவர்கள் நினைத்துள்ளனர். ஆனாலும் இந்த பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாமல் 27 நாடுகளிலும் பயணம் மேற்கொண்டனர்.

இது பற்றி தெரிவிக்கும் அவர்கள், தங்களை போல மற்றவர்களும் சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பல தடைகளை கடந்து இதனை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பயணம் பற்றி தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவும் பல நாடுகளுக்கு செல்ல வேண்டுமென விரும்பும் பலருக்கும் ஒரு சிறப்பான வழிகாட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.