எனக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகுமா? சந்தேகத்தில் நடிக்க மறுத்த ரஜினி.. அதுவே அடையாளமாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம்..

By John A

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வந்த போது வில்லத்தனமாக கதாபாத்திரங்களிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடித்து அப்போதே சூப்பர்ஸ்டார் என்ற பெயரைப் பெற்று விட்டார். எனினும் ரசிகர்கள் மட்டுமின்றி பெண்களும், குழந்தைகளும் விரும்பும் நடிகராக மாற்றிய படம் என்னவென்றால் அது 1984-ல் வெளியான தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம் தான்.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் இயக்குர் ராஜசேகர் இப்படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்த போது சில நாட்களில் ரஜினிக்கு படத்தின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. ஏனெனில் ரஜினி உச்ச நட்சத்திரமாக வளர்ந்த நேரத்தில் மீண்டும் கிராமத்துக் கதபாத்திரம், முதல் பாதி முழுக்க காமெடி எனப் படம் சென்றிருக்கிறது.

இதனால் ரஜினிக்கு இந்தப் படத்தில் நடிக்க இஷ்டமில்லாமல் இருக்க தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திடம் கூறியிருக்கிறார். அப்போது பஞ்சு அருணாச்சலம் தில்லு முல்லு படத்தில் காமெடியில் நடித்தாயே என்று கேட்டிருக்கிறார். அது முழு நீளக் காமெடிப் படம்.

சோர்ந்து கிடந்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. தூக்கி விட்ட அந்த ஒரு பாடல்..இமாலய சாதனை படைத்த படம்

ஆனால் இந்தப் படம் காமெடியும் அல்லாமல், ஆக்சனும் இல்லாமல் செல்கிறது என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார். அப்போது பஞ்சு அருணாச்சலம் ரஜினிக்கு இந்தப் படத்தில் கூடுதலாக இரண்டு சண்டைக் காட்சிகளைச் சேர்த்திருக்கிறார். மேலும் ரஜினியிடம் சண்டைக் காட்சியில் நடிக்க ஆயிரம் நடிகர்கள் வருவார்கள். ஆனால் காமெடி மட்டுமே உன்னை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும் என்று கூறி நடிக்க வைத்திருக்கிறார்.

பஞ்சு அருணாச்சலம் சொன்னபடி தம்பிக்கு எந்த ஊரு படத்தில் நடித்தார் ரஜினி. சொன்னது போலவே படம் வெளியாகி ரஜினியின் காமெடிக்கு தியேட்டரில் விசில் பறந்தது. மேலும் சக்சஸ் பார்முலாவையும் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டார் ரஜினி. அதாவது காமெடியும் முக்கியம் என்று அறிந்து அடுத்து வந்த படங்களில் தானே காமெடி செய்ய ஆரம்பித்தார். இதனை ரசிகர்கள் மிகவும் விரும்பவே இன்று வரை அதனை தொடர்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் அப்படியே ரஜினியின் ஸ்டைலை ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.