இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் சாலைப் போக்குவரத்துக்குப் பிறகு அதிகம் பேரால் விரும்பப்படுவது ரயில் போக்குவரத்தே. அலுப்பில்லாத பயணம், குறைவான கட்டணம், வேகம் என அனைத்திற்கும் ரயில் பயணம் சவுகர்யமாக இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள். தற்போது விமானத்திற்கு ஈடாக வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் சகல வசதிகளையும் கொண்டுள்ளதால் நாளுக்கு நாள் ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமாகவும், உலகில் இரண்டாவதாக அதிகம் பேர் பணிபுரியும் துறையாக இந்தியன் ரயில்வே விளங்குகிறது. ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டே செல்வது வாடிக்கையாகி விட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவுகளைக் காட்டிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் அதிக டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரயில்வேயின் வருமானம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் டிக்கெட் கேன்சல் செய்வது, அபராதத் தொகை விதிப்பது உள்ளிட்டவற்றாலும் ரயில்வேத் துறைக்கு வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் புது டெல்லி ரயில் நிலையம் ரூ. 3,337 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து இரண்டாவதாக மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா ரயில் நிலையம் ரூ. 1,692 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தியேட்டரில் சிரிப்பு வெடி கன்பார்ம்.. மீண்டும் இணையும் கைப்புள்ள வடிவேலு- சுந்தர் சி கூட்டணி
தற்போது பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை கூடுதலாக ஒன்று அதிகரிக்கப்பட உள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியை பயணிகளின் வசதிக்காக கூடுதலாக ஒன்று சேர்த்து அதனை பொதுப் பெட்டியாக மாற்றும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டு வருகிறது. மேலும் அண்மையில் ரயில்வேயில் உள்ள பணியாளர்களை அதிகரிக்கும் நோக்கில் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பும் வெளியிட்டப்பட்டது.