தோசையை திருப்ப இப்டி ஒரு கருவியா.. பேச்சுலர் தொடங்கி பெண்கள் வரை ஏங்க வைத்த வீடியோ..

By Ajith V

Published:

இணையத்தில் நாம் நாள் தோறும் விதவிதமான வீடியோக்கள் வைரல் ஆவதை பார்த்திருப்போம். அதிலும் ரக ரகமான வீடியோக்கள் பெரிய அளவில் கவனம் பெறும் நிலையில் முக்கியமான ஒரு சம்பவம் தான் உணவு பொருட்கள் தொடர்பான வீடியோக்கள். உணவு பிரியர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான இடங்களில் நிறைய தூரம் பயணம் மேற்கொண்டு அங்கே ஸ்பெஷலாக இருக்கும் உணவகங்களில் தேடி தேடி வாங்கி உண்பார்கள் .

இதை பார்க்கும் பலருக்கும் அங்கே சென்று ஒரு முறையாவது அதை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும். புட் வ்லாகர்கள் என்ற பெயரில் நிறைய உணவகங்களிலோ அல்லது தெருவோரம் இருக்கும் வண்டி கடைகளிலோ விதவிதமான உணவுகளை வாங்கிக்கொண்டு வீடியோ பகிரும் நெட்டிசன்களும் ஏராளமானோர் உள்ளனர் .

அந்த வரிசையில் தற்போது ஒரு உணவுப் பொருள் இல்லாமல் அது தயாராவது தொடர்பான வீடியோவும் அதன் பின்னால் இருக்கும் ஒரு கருவி ஒன்றை பற்றியும் தான் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

ரோட்டோரம் இருக்கும் வண்டி கடை தொடங்கி பெரிய பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்கள் வரை இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான உணவு வகை தான் தோசை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்டு வரும் சூழலில், முட்டை தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை என பல விதமான வகைகளும் உள்ளது.

தோசை கடையில் பலரும் தோசையை மிக லாவகமாக திருப்பி போடும் அதே நிலையில் வீட்டில் தயார் செய்யும் போது நிச்சயம் அது பிய்ந்து போகவோ அல்லது சரியாக வேகாமலோ போவதற்கு வாய்ப்பு உண்டு. வெறும் தோசை மாவு ஊற்றினாலே இந்த நிலை இருக்க நாம் அதில் முட்டை அல்லது வேறு காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்றால் நிச்சயம் அதனை திருப்பி சரியாக போடுவது என்பது பெரும்பாடு தான்.

சமையல் நன்கு தெரிந்தவர்களே சில நேரம் பாடுபட்டு போகும் நிலையில் தான் இதனை லாவகமாக திருப்புவதற்கான கருவி தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றில் நபர் ஒருவர் தோசை கல்லில் தோசை ஊற்றிவிட்டு அந்த கருவி மூலம் அதனை மிக நைசாக திருிப்பி போட்டு சுற்றி எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவும் செய்கிறார். அதில் எந்த பிழையும் இல்லாமல், தோசை பிய்ந்து போகாமல் நேராக மிகவும் அழகாக வருவது பலரையும் அது என்ன கருவி என தேட வைத்துள்ளது.

பேச்சுலர்கள் தொடங்கி புதிதாக சமையல் கற்றுக் கொள்ளும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே தோசை சுடும்போது சரியாக எடுக்க அந்த கருவி தேவை என பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில், ஒரு சிலர் சற்று வேடிக்கையான கருத்தையும் அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.