சுங்கச்சாவடியில் புதிய நடைமுறை.. பல வாகனங்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை.. மேஜர் குட்நியூஸ்

By Keerthana

Published:

டெல்லி: சுங்கச்சாவடிகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுகளுக்கு பொதுமக்களுக்கு டோல்கட்டணம் என்பது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎன்எஸ்எஸ் எனும் சேட்டிலைட் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி என்பதை பார்ப்போம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் ஒவ்வொரு 50 முதல் 60 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தவிர, அனைத்து வாகங்களுக்கும் சுங்க கட்டணம் அ வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் என்பது தேசிய நெடுஞ்சாலைகளுக்கு செலவு செய்த தொகைகளை எடுக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடியில் கட்டணங்கள் ரொக்கமாகவும், கூகுள் பே, போன்பே, அமேசான் பே உள்ளிட்ட யூபிஐ முறையிலும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வசூலிக்கப்பட்டு வந்ததது. இது தான் பல வருடங்களாக இருந்த நடைமுறையாகும்.இதற்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. பாஸ்டேக் மூலம் நேரடியாக வங்கி கணக்குகளில் இருந்து டோல் கட்டணம் எடுக்கப்பட்டதால் வரிசையில் வாகனங்கள் நிற்கும் நேரம் குறைந்துள்ளது. எனினும் அடுத்தகட்டமாக சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் முறையில் புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது.

அதாவது ஜிஎன்எஸ்எஸ் (GNSS) என்று அழைக்கப்படும் Global Naviagation Satellite System முறையில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி வாகனங்களில் ஆன் போர்ட் யூனிட் (On – Board Unit) எனும் ஓபிசி கருவி பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் சேட்டிலைட்டுடன் இணைக்கப்பட்டு விடும். இதன்மூலம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தொலைவு என்பது கணக்கிட்டு சுங்கச்சாவடிகளில் உள்ள ஸ்கேனர் மூலம் நேரடியாக பணம் எடுத்து கொள்ளப்படும்.

இதற்காக ஜிஎன்எஸ்எஸ் திட்டத்துக்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் (Determination of Rates and Collection) 2008ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தள்ளது. இதன்படி ஜிஎன்எஸ்எஸ் வாகனங்களுக்காக டோல்கேட்டுகளில் தனியாக வழிப்பாதை வழங்க வழி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் என்பதுமிகவும் பிரபலமான தேசிய நெடுஞ்சாலை, அதிவேக எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வர இருக்கிறது. அதன்பிறகு படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் தான் ஜிஎன்எஸ்எஸ் முறை அமலுக்கு வரும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் இலவசமாக பயணிக்கலாம்.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛தேசிய அனுமதி பெறாத (National Permit Vehicle) வாகனங்கள் தவிர பிற வாகனங்களின் ஓட்டுநர், உரிமையாளர்களுக்கு பயண நாளின் முதல் 20 கிலோமீட்டர் பயணத்துக்கு சுங்கக்க கட்டணம் என்பது என்பது வசூலிக்கப்படாது’ . தற்போது சோதனை அடிப்படையில் சில இடங்களில் இந்த முறை உள்ள இடங்களில் இந்த நடைமுறை என்பது நேற்று முதல் அமலாகி இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் முதல் 20 கிலோமீட்டரை கழித்து தான் வாகனங்களுக்கான டோல் கட்டணம் என்பது சேட்டிலைட் முறையில் வசூல் செய்யப்படும். சேட்டிலைட் முறையிலும் அனைத்து தரப்பு மக்களும் பயண நாளின் முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்படாது . இதன்மூலம் டோல்கேட்டையொட்டி பகுதிகளில் முதல் 20 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள் .அதேபோல் பிற வாகன ஓட்டிகளும் பயண நாளில் முதல் 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் சுங்கச்சாவடி வந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுளளது.