Fitness Secret: 60 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பு… முகேஷ் அம்பானியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

By Amaravathi

Published:

உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் முகேஷ் அம்பானி தனது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் நெம்பர் தொழிலதிபராக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு வயது 67. இந்த வயதிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றுவதோடு, ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் தக்க வைத்து வருகிறார்.

அளவுக்கு அதிகமாக பணம் சேர்ந்தால் ஆரோக்கியம் கெடு என்பார்கள். ஏனெனில் பணத்தை சேர்ப்பதற்காக நேரம் பார்க்காமல் உழைப்பவர்கள் உணவு, உறக்கம் போன்ற ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டார்கள் என கருதப்படுகிறது. ஆனால் நொடிக்கு கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ஆரோக்கியத்தை சரியாக பராமரித்து வருகிறார். இதற்காக தினந்தோறும் அவர் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் உடற்தகுதிக்கு அவரது உணவுத் தேர்வு மிக முக்கியமானதாக உள்ளது. அடுத்து யோகா மற்றும் தியானத்துடன் தனது நாளைத் தொடங்குவது முதல் லேசான உணவைத் தேர்ந்தெடுப்பது வரை, ஆரோக்கியத்திற்கான அம்பானியின் அணுகுமுறை அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவுகிறது. முகேஷ் அம்பானியின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதோ:

1. காலையில் எழுந்ததும் முதல் வேலை என்னத் தெரியுமா?

முகேஷ் அம்பானி தனது நாளை யோகா மற்றும் தியானத்துடன் தொடங்குகிறார். அவர் தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து யோகா மற்றும் தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் சூரிய நமஸ்காரம், ஒரு குட்டி வாக்கிங் என தனது நாளை சுறுசுறுப்பாக ஆரம்பிக்க, ஒருபோதும் தவறுவதில்லை. இதன் மூலமாக தனது நாளை பாசிட்டிவாக தொடங்குவதுடன் அந்த நாளுக்குத் தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பெறுகிறார்.

2. காலை உணவு இதுதான்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (ஆர்ஐஎல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் காலை உணவு மிகவும் சிம்பிளானது. பழங்கள், பழச்சாறு, இட்லி மற்றும் சாம்பார் ஆகியவற்றில் ஒன்றையே எடுத்துக்கொள்கிறார். ஒரு நேர்காணலின் போது, ​​நிதா அம்பானி,முகேஷ் அம்பானி உணவு முறையைக் கடைபிடிப்பதில் மிகவும் ஒழுக்கமானவர் என்றும், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியே சென்று உணவருந்துவோம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு முழுக்க முழுக்க வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிடுவார் எனக்குறிப்பிட்டிருந்தார்.

3.மதியம், இரவில் என்ன சாப்பிடுவார்?

முகேஷ் அம்பானி மதியம் மற்றும் இரவு உணவிலும் சிம்பிளான இந்திய உணவு வகைகளையே விரும்பி எடுத்துக்கொள்கிறார். பருப்பு, சப்ஜி, அரிசி, சூப்கள் மற்றும் சாலட்களை உள்ளடக்கிய குஜராத்தி வகை உணவுகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

4. இந்த பழக்கம் கிடையாது:

பிசினஸ் மேன் என்றாலே பார்ட்டி, வியாபார ரீதியான சந்திப்புகளின் போது மது அருந்துவது சகஜமானதாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சமூக நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கூட மது அருந்துவது கிடையாது. இதனால் மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் மட்டுமின்றி, அத்துடன் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்கிறார்.

5. இத தொடக்கூட மாட்டாராம்: 

பல்வேறு அறிக்கைகளின் படி, பல பார்ட்டிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் கூட, முகேஷ் அம்பானி சைவ உணவில் உறுதியாக இருக்கிறார் மற்றும் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிர்ப்பார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.