தவெக முதல் மாநாடு: விஜய்யின் ’பிளான் பி’ திட்டம் என்ன?

By Bala Siva

Published:

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் 15 நாட்களே மாநாட்டு தேதிக்கு இருந்தாலும் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கட்சியின் தலைவர் விஜய் ’பிளான் பி’ வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மாநாட்டிற்கான பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை குறித்து காவல்துறையினர் 21 கேள்விகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் இடம் கேட்டதாகவும் அதற்கு புஸ்ஸி ஆனந்த் தகுந்த பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாநாட்டிற்கு இப்போது அனுமதி கொடுத்தால் கூட பத்து நாட்களில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடலாம் என்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய டெண்டர் எடுத்தவர் கூறி வருகின்றனர். இருப்பினும் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவது என்று ’பிளான் பி’ திட்டத்தை விஜய் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாமதமானால் ’பிளான் சி’ வைத்திருப்பதாகவும் அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் விஜய் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாட்டை நடத்தியே தீருவது என்று இருக்கும் நிலையில் அடுத்தடுத்து என்னென்ன திருப்புமுனைகள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: politics, TVK, vijay