தேனி: உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் செய்தியாளர் ஒருவரிடம் நடிகர் ஜீவா ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனியில் செய்தியாளர் ஒருவர் ஹேமா கமிட்டி குறித்து திரும்ப திரும்ப கேள்வி எழுப்பியதால், ஆவேசம் அடைந்து பேசினார்.
தேனி மாவட்டம், தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரபலமான தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழா இன்று நடந்தது. நடிகர் ஜீவா வந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி ஜவுளிக்கடையை திறந்து வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜீவா, “நான் தேனிக்கு ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறேன். இதற்கு முன்னதாக, தெனாவட்டு படத்தின் ஷுட்டிங்கிற்காக தேனிக்கு வந்தேன். அதற்கு பின் இப்போ தான் வந்துள்ளேன். பல இன்ட்ஸ்டிரியில் பல விஷயங்கள் நடக்கிறது. அனைவரின் முகத்திலும் சிரிப்பை ஏற்படுத்துவது தான் என்னுடைய வேலை என்றார்.
இதற்கிடையில், ஹேமா கமிட்டி தொடர்பான செய்தியாளர் ஒருவர் திரும்ப திரும்ப கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார். இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என செய்தியாளரிடம் அவர் முதலில் பொறுமையாக கூறினாராம். ஆனால் திரும்ப திரும்ப கேட்டதால் டென்சனான ஜீவா ஒருமையில் பேசியிருக்கிறார். உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் திட்டியவாறு” ஜீவா சென்றார். இதனால் செய்தியாளருக்கும், ஜீவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மலையாள திரையுலகில் நடிகைகள் முதல் பெண் ஊழியர்கள்வரை நடைபெறும் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையில் இருக்கும் அம்சங்கள் வெளியாகி உள்ளன . அதன் காரணமாக கேரள திரையுலகில் பெரும் புயல் வீசிவருகிறது